நிலைக்குத்து வேளாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vertical farm2.jpg

நிலைக்குத்து வேளாண்மை என்பது, நகர்ப்புற வானளாவிகளில் நடைமுறைப்படுத்தக்கூடிய வேளாண்மையைக் குறிக்கும். பசுங்குடில் முறைகளைப் பயன்படுத்தி பழ மரங்கள், மரக்கறி வகைகள், மீன், கால்நடைகள் என்பவற்றை வளர்க்க முடியும். ஆண்டு முழுதும் செய்யக்கூடிய இவ் வேளாண்மை மூலம் எதிர்கால நகரங்கள் உணவில் தன்னிறைவு பெறுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

நிலைக்குத்து வேளாண்மை ஒரு துல்லியமான தொழிற்சாலை முறை விவசாயம் ஆகும். சுற்றுச்சூழல் தாக்கம் இதனால் குறைகிறது.

நிலைக்குத்து வேளாண்மையில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. இதிலே காலநிலை தொடர்பான பயிர் அழிவுகள் ஏற்படா. தொடர்ச்சியான உணவு உற்பத்திக்கான சாத்தியங்கள் உண்டு. இம்முறையைப் பெருமளவில் பயன்படுத்தினால், காடழிப்பு, பாலைவனமாதல் போன்றவற்றைக் குறைக்கவோ அல்லது தடுக்கவோ முடியும். மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளிலேயே உணவு உற்பத்தி இடம்பெறுவதால் பெற்றோலிய எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க முடியும். இயந்திரங்களைப் பயன்படுத்திய உழவு, நடுகை, அறுவடை போன்ற செயற்பாடுகள் இல்லாததால் எரிபொருட் பயன்பாடு மேலும் குறையும்.