நிலஞ்சனா தத்தா
பிறப்பு | {{{birth_date}}} |
---|---|
வதிவு | ஐக்கிய இராச்சியம் |
துறை ஆலோசகர் | ஜர்க் ஃப்ரோலிச், ரூடால்ஃப் மார்ஃப் |
நிலஞ்சனா தத்தா (Nilanjana Datta) குவாண்டம் தகவல் கோட்பாட்டில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய கணிதவியலாளர் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு கணிதம் மற்றும் தத்துவார்த்த இயற்பியல் துறையில் குவாண்டம் தகவல் கோட்பாட்டில் ஒரு வாசகராகவும், மற்றும் பெம்பிரோக் கல்லூரியின் உறுப்பினராகவும் உள்ளார்.
இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் பிறந்த தத்தா, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார் மற்றும் அணுக்கரு இயற்பியலுக்கான சா‘ஃகா நிறுவனத்தில் முதுகலைப் பட்டத்திற்குப் பிறகான கல்வியைத் தொடர்ந்தார். 1995 ஆம் ஆண்டில் அவர் ஜர்க் ஃப்ரோஹ்லிச் மற்றும் ருடால்ப் மோர்ஃப் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஈ.டி.எச் சூரிச்சிலிருந்து முனைவர் பட்டம் பெற்றார், குவாண்டம் புள்ளிவிவர இயக்கவியல் மற்றும் குவாண்டம் ஹால் விளைவு ஆகியவற்றில் இவரது ஆய்வாக இருந்தது.