நிர்வாண பூஜை (இந்து சமயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிர்வாண பூஜை என்பது இந்து சமயத்தில் நம்பிக்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் சடங்காகும். [1] நாட்டாரியல் சடங்குகளில் இந்த நிர்வாண பூஜை வளமைச் சடங்குகளின் கீழாக வருகின்றது. இந்த சடங்கினை மழையை வேண்டி கிராமத்து மக்கள் செய்கின்றனர். [2] பெண்கள், சிறுவர்கள் போன்றோர்களை இந்தச் சடங்கிற்காக நிர்வாணப்படுத்தி அச்சமூகமே செய்கிறது. இந்து சமயத்தில் மாந்திரீக காரணங்களுக்காக இரவு நேரங்களில் சாக்த தெய்வங்களான துர்க்கை, காளி, சாமுண்டி போன்ற தெய்வங்களுக்கு பூஜை செய்யப்படுகிறது.

பொதுவாக முழு நிலவு நாள், அம்மாவாசை போன்ற நிலவின் சிறப்பான நாட்களில் இப்பூசைகள் செய்யப்படுகின்றன. பெண்ணையோ, ஆணையோ வசியம் செய்வதற்கும், குழந்தை பேரின்மைக்கும், பதவிக்காகவும்[3], மாந்திரீக சக்திகாகவும் இவ்வாறான நிர்வாண பூசைகள் செய்யப்படுகின்றன.

தண்டனை[தொகு]

இந்தியாவில் இச்சடங்குமுறை சட்டரீதியா அங்கிரிக்கப்படாததாகும். அதனால் இப்பூசைகளை செய்வோர்களை காவல்துறை கைது செய்கிறது. [4] மகாராட்டிரா மாநிலத்தில் நரேந்திர தபோல்கர் என்பவர் இத்தகைய மூடநம்பிக்கைக்கு எதிராக போராடி இறந்தார். அதனால் மகாராட்டிர அரசு இவைகளை தடைசெய்துள்ளது. [1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 நள்ளிரவு நிர்வாண பூஜை தடைவித்த மகாராஷ்டிரா - விகடன்
  2. வளமைச் சடங்குகள் தமிழாய்வு தளம்
  3. தர்மபுரி மருத்துவ கல்லூரியில் முதல்வராக நிர்வாண பூஜை செய்த பேராசிரியர்: புகைப்படத்தை வெளியிட்டார் மனைவி-தினகரன் 2016-02-13
  4. நிர்வாண பூஜை நடத்திய சாமியார் அதிரடி கைது- தினமலர் மார்ச் 1, 2016