நிர்மலா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்மலா தேவி (Nirmla Devi) இந்தியாவைச் சேர்ந்த பெண் மல்யுத்த வீரராவார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 48 கிலோ கட்டற்ற வகை எடைப்பிரிவில் போட்டியிட்ட இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[1]

ஈசுவர் சிங் மற்றும் கிடாபோ தேவி தம்பதியருக்கு இவர் மகளாகப் பிறந்தார்.[2] ஈசுவர் சிங்கின் ஐந்து குழந்தைகளில் நிர்மலா மூத்தவராவார். இளையவரான பூனமும் ஒரு மல்யுத்த விளையாட்டு வீரர். நிர்மலா 2001 ஆம் ஆண்டு முதல் மல்யுத்தத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டார். பின்னர் அதே ஆண்டில் தேசிய வெற்றியார் கோப்பையை நிர்மலா வென்றார். [3]

அரியானா மாநிலத்திலுள்ள இசார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் அரியானா காவல்துறையில் பணிபுரிகிறார். கனடாவில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற பின்னர் 2007 ஆம் ஆண்டு நிர்மலா துணை ஆய்வாளராக பதவி உயர்ந்தார். 2010 ஆம் ஆண்டு எசுப்பானியாவில் நடந்த பன்னாட்டு மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை நிர்மலா வென்றார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.ndtv.com/article/commonwealth%20games/nirmala-devi-wins-silver-in-48-kg-freestyle-wrestling-57856
  2. "पहलवान फौजी दादा की पहलवान बेटी से मिलिए, ओलंपियन को चटाई धूल". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 2019-11-23.
  3. "पहलवान फौजी दादा की पहलवान बेटी से मिलिए, ओलंपियन को चटाई धूल". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 2019-11-23.
  4. "पहलवान फौजी दादा की पहलवान बेटी से मिलिए, ओलंपियन को चटाई धूल". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 2019-11-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_தேவி&oldid=3206674" இலிருந்து மீள்விக்கப்பட்டது