நிஞ்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜப்பானிய கதைகளில் நிஞ்சா

ஜப்பானிய வரலாற்றில், நிஞ்சா(சிநோபி) என்பவர்கள் ஆட்கொலை, உளவு மற்றும் மரபுசாரா போர்க்கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.

ஜப்பானியக் கலாசாரத்தில், நிஞ்சாக்கள் அபாயகரமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் பயிற்சி அளிக்கப்பட்டனர். அவர்களுடைய தோற்றம் சர்ச்சைக்கு உட்பட்டதாகவே உள்ளது. சில வரலாற்று ஆசிரியர்கள் சீனத்தாக்கத்தினால் நிஞ்சாக்களின் தோற்றம் நடந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். வரலாற்றுப்பூர்வமாக நிஞ்சாக்கள் ஜப்பானில் 14வது நூற்றாண்டில் தோன்றினர் என அறியப்படுகிறது. நிஞ்சாக்கள் ஜப்பானின் கமகுரா காலம் முதல் ஈடோ காலம் வரை செயல்பட்டனர். அவர்கள் நாசவேலை, உளவு, ஆட்கொலை போன்றவற்றை நிலப்பிரபுக்களின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டி செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

நிஞ்சா என்பது ஷினோபி-நொ-மோனோ என்ற ஜப்பானிய சொற்களை எழுத பயன்படுத்தப்படும் 忍者 என்ற இரண்டு கன்ஜி எழுத்துக்களின் ஓன்யோமி உச்சரிப்பாகும் (சீன உச்சரிப்பு). ஷினோபி-நோ-மோனோ என்பதே இக்கன்ஜி எழுத்துக்களின் குன்யோமி உச்சரிப்பு (உள்ளூர் உச்சரிப்பு) ஆகும். நிஞ்சுட்ஸு கலைகளை பயன்படுத்துபவர்களை நிஞ்சாக்கள் என அழைத்தனர். ஜப்பானியத்தில் ஷினோபி என்றால் களவாடுதல் என்று பொருள், மோனோ என்ற மனிதர் என பொருள் கொள்ளலாம். எனவே மறைந்திருந்து தாக்குபவர்களை ஷினோபி-நொ-மொனோ (ஜப்பானிய நொ(の)-தமிழ் 'இன்' போல. இதை ஷினோபியின் மனிதர் என்ற தமிழ்ப்படுத்தலாம். காண்க ரெக்காவின் நெருப்பு- ரெக்கா-நொ-ஹொனோ ஹொனோ-நெருப்பு)

நிஞ்சா என்ற சொல் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகே மிகவும் புகழ்பெறத் தொடங்கியது.

வரலாற்றுத் தோற்றம்[தொகு]

நிஞ்சாக்கள் ஆயுதங்கள் தரித்த சாமுராய்களுக்கு எதிராக மறைந்து தாக்கும் திறன்களில் சிறப்புற்று விளங்கினர் என்றாலும் அவர்களுடைய பணி உளவுடன் நின்றுவிடவில்லை. இந்த மறைந்து இருந்து தாக்கும் திறனே(நிஞ்சுட்ஸு) நிஞ்சாக்களை சாமுராய்களிடமிருந்து வேறுபடுத்தியது. ஆயுதங்களேந்திய சாமுராய்களுக்கு எதிராகவே துரிதமாக தாக்கிவிட்டு மறைய வேண்டி, அவர்களுடைய குறிப்பிடத்தக்க போர்த்திறன் மற்றும் ஆயுதங்கள் வடிவைப்பு இருந்தது.

ஒரு குழுவாக நிஞ்சாக்கள் குறித்து 15வது நூற்றாண்டு வாக்கில் போர்க்குழுக்கள் என்ற முறையில் எழுதப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் பல்வேறு சிறு நிலபிரபுக்களுக்கு(டைம்யோ) இடையில் பல்வேறு முரண்பாடுகள் எழுந்தன. எனவே நேரடித்தாக்குதலை விட மறைமுகத்தாக்குதல் மிகவும் ஏற்புடையதாக இருந்தது. சாமுராய்கள் மறைமுகத்தாக்குதல்களை இழுக்கு எனக்கருதியதால் சாமுராய்களை இவ்வித தாக்குதல்களின் ஈடுபடுத்த முடியாமல் போனது. எனவே நிலப்பிரபுக்கள் எதிரிகளின் மறைமுகத்தாக்குதலுக்கு நிஞ்சாக்களின் உதவியை நாடினர்.

நிஞ்சாக்கள் தங்களுடைய குறித்த அனைத்து விஷயங்களையும் ரகசியமாக வைத்திருந்ததால், அவர்கள் குறித்து கிடைத்த அனைத்து தகவல்களுமே அவர்களுடைய பிறர் அவர்களுடைய வெளித்தொற்றத்தை கண்டு குறிப்பிட்டதே ஆகும். எனவே நிஞ்சாக்கள் குறித்த பல விஷயங்கள் யூகங்களாகவே உள்ளன.

கட்டமைப்பு[தொகு]

நிஞ்சாக்கள் சிறு குழுக்களாக தங்களுடைய குடும்பம் மற்றும் கிரமத்தினை சுற்றி அவர்களுடைய கட்டமைப்பு இருந்தது. பிற்காலத்தில் நிஞ்சாக்களின் கட்டமைப்பு சாமுராய்களின் போர்க்கட்டமைப்புக்கு ஒத்து விளங்கியது. குறிப்பிட்ட நிஞ்சாக்கள் கிராமங்களை கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அக்கிராமங்கிலேயே இருத்தி வைக்கப்பட்டனர்.

பெண்களும் நிஞ்சாக்களாக இருதிருக்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களுடைய கவர்ச்சியினால் எதிரிகளிடமிருந்து இரகசியங்களை அறிந்து கொண்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. அதே சமயத்தில் உளவு பார்க்கும் பொருட்டு பணிஆட்களாகவும் அவர்கள் செயல்புரிந்திருக்கக்கூடும் .

சித்தரிப்பு[தொகு]

தற்காலத்தில் சித்தரிப்பது போல், நிஞ்சாக்கள் முற்றிலும் கருப்பு உடைகளை அணிந்திருந்தனர் என்பதற்கு எந்த சான்றும் இல்லை. ஒரு வேளை இரவு நேரங்களில் மட்டும் இருண்ட நிறம் கொண்ட உடைகளை அனிந்திருக்கலாம். சில நிஞ்சாக்கள் சாமுராய் போலவோ அல்லது ஒரு சாதாராண குடிமகனைப் போலவோ கூட ஆடை அணிந்து இருந்திருக்கலாம்.

நிஞ்சாக்களின் காலணிகள் (ஜிகா-டாபி) அக்காலத்திய மற்ற ஜப்பானிய காலணிகளைப் போலவே இருந்தது. அமைதியாக இருக்கும் பொருட்டு அவை மிகவும் மிருதுவாக இருந்தன. நிஞ்சாக்கள் தங்களுடைய காலணிகளுக்கு கீழ்ப்புறம் அஷிகோ என்ற கூரிய முனைகளை இணைத்துக்கொண்டனர்

ஆயுதங்கள்[தொகு]

நிஞ்சாக்கள் ஆட்கொலை, உளவு போன்று மறைமுகச்செயல்களிலேயே ஈடுபட்டிருந்ததால், அவர்களுடைய ஆயுதங்களும் பிற திறன்களும் அதற்கேற்ற வண்ணமே அமைந்திருந்தன.

சிறப்பு ஆயுதங்கள் மற்றும் போர்த்திறன்கள்[தொகு]

நிஞ்சாக்கள் பலவிதமான ஆயுதங்கள் மற்றும் மாயத்தோற்றங்களை வெடிமருந்து மூலம் செய்தனர். எதிரிகளை திசை திருப்ப புகை குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. ஓஸுட்ஸு என்ற பீரங்கி எதிரிகளுக்கு எதிராக தீப்பொறிகளை ஏவும் திறன் கொண்டது. மெட்ஸுபுஷி என்ற சிறு குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இந்த குண்டினுள் மண்ணும் உலோக தூளும் நிரப்பப்பட்டிருக்கும். இதை மற்றவர்களின் மீது எறிகையில் அதனுள் உள்ள தூள் வெளிப்பட்டு கண்களை குருடாக்கிவிடும். சில சமயங்களில் கண்ணி வெடிகள் கூட பயன்படுத்தப்பட்டது. வெடிமருந்தினை உற்பத்தி செய்யும் வெடி நிஞ்சா குழுக்களிடையே ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

தங்களை பின் தொடராமல் தடுக்கவும் திடைதிருப்பவும்,, தங்கள் கால்களில் அஷிஅரோ என்ற மர அட்டைகளை தங்களுடைய காலுறைகளில் கட்டுக்கொள்வர். இந்த மர அட்டைகளை விலங்கின் கால்தடம் போலவோ அல்லது குழந்தையின் கால்தடம் போலவோ அமைந்திருக்கும். எனவே அவர்களை பின் தொடர்ந்து வருவது தடுக்கப்பட்டது.

நிஞ்சாக்கள் தங்களுடைய விரல்களில் ஷோபோ என்ற மோதிரங்களை அனிந்திருந்தனர். இம்மோதிரஙகளில் கீரல் கொண்ட மரத்துண்டுகள், அதைக்கொண்டு அவர்கள் எதிரிகளை தாக்கினர். இதேவிதமாக சுன்டெட்ஸு என்ற மர மோதிரத்தையும் பயன்படுத்தினர்

நிஞ்சாக்கள் சிறப்பு குறுவாள்களை பயன்படுத்தினார். அவை நிஞ்சாக்கென் அல்லது ஷினோபிகடானா என அழைக்கப்பட்டது. நிஞ்சாக்கென் பெரும்பாலும் போர்முறை அல்லாத பயன்பாட்டிற்கே உபயோகபடுத்தப்பட்டது. ஷிகோரோ கென் என்ற இன்னொரு விதமான வாளை அவர்கள் கட்டிடங்களுனுள் நுழைய பயன்படுத்தினர்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஞ்சா&oldid=3370303" இலிருந்து மீள்விக்கப்பட்டது