நிசாததேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிசாததேசம் அவந்திதேசத்திற்கு நேர்கிழக்கிலும், விந்திய மலையின் நடுபாகத்தின் வடசார்பிலும், பூமியில் விசாலமாகப் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசமானது, மிகப்பெரிய தேசம் என்ற போதிலும் கோசலத்தைவிட சிறியதென்றே கூற வேண்டும். பெரிய மேடுபள்ளமும், பெரிய மலையருவிகள் இருப்பதால் குளிர், மழை, பனி எப்பொழுதும் விடாமல் பெய்து கொண்டே இருக்கும். இது பெரிய கற்பாறைகளும், மண்ணும் கலந்த பூமியாக இருக்கும்.[2]

பருவ நிலை[தொகு]

இமயமலூயின் நடுபாகத்தில் உருவாகும் சரயூ நதி, தமசாநதி, கங்காநதி என்னும் இம்மூன்றின் நீர் ஏறிப்போவதற்கு தகுந்த பூமி, குளிர், மழை விடாமல் மாதம் மும்மாரி மழை பெய்துகொண்டே இருக்கும்.

மலை, காடு, மிருகங்கள்[தொகு]

இந்த தேசத்தின் தெற்கில் உள்ள விந்தியமலையின் சிறு மலைத்தொடர்களே தெற்கு நோக்கி ஓடும் சர்மண்வதீ நதியும், சிறிய காடுகளும், அவைகளில் பெரிய மலைப்பாம்பு, கரடி, பன்றி, புலி, யானை ஆகிய கொடிய மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் பூமிவளம் மிகவும் குறைவானபடியால் வளம் நிறைந்த தோட்டங்கள் கொஞ்சமும் கிடையாது. இந்த தேசத்தின் தெற்குபாகத்தில் உயரமான விந்தியமலைகள் அதிகம் அதில் ஒரு மலைக்கு கங்காளகிரி என்று பெயர்.

நதிகள்[தொகு]

இந்த தேசத்தில் புண்ணியநதிகள் என்று ஒன்றும் கிடையாது. விந்தியமலையின் சிறு மலைத்தொடர்களே தெற்கு நோக்கி ஓடும் சர்மண்வதீ நதியும், சிற்றாறுகளும், நீரோடைகளும், யமுனை நதிக்கும் உப நதிகளாக உள்ளது.

விளைபொருள்[தொகு]

இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாமிரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 135 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாததேசம்&oldid=2076830" இலிருந்து மீள்விக்கப்பட்டது