நார்த் பை நார்த்வெஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நார்த் பை நார்த்வெஸ்ட்
திரையரங்க வெளியீட்டுச்
சுவரொட்டி
இயக்கம்ஆல்பிரட் ஹிட்ச்காக்
தயாரிப்புஆல்பிரட் ஹிட்ச்காக்
கதைஎர்னஸ்ட் லீமன்
இசைபெர்னார்ட் ஹெர்மன்
நடிப்பு
ஒளிப்பதிவுராபர்ட் பர்க்ஸ்
படத்தொகுப்புசியார்ச் தோமசினி
கலையகம்மெட்ரோ கோல்ட்வின் மேயர்
விநியோகம்மெட்ரோ கோல்ட்வின் மேயர்
வெளியீடுசூலை 1, 1959 (1959-07-01)(சிகாகோ)
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$4.3 மில்லியன் (30.8 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$9.8 மில்லியன் (70.1 கோடி)[1]

நார்த் பை நார்த்வெஸ்ட் (North by Northwest) என்பது 1959 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க ஒற்றர் சார்ந்த பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஆல்பிரட் ஹிட்ச்காக் தயாரித்து இயக்கி இருந்தார். கேரி கிராண்ட் நடித்திருந்தார்.[2] தவறாக அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நபரை பற்றி இந்தக் கதை அமைந்திருந்தது. அரசாங்க இரகசியங்களைக் கடத்த நினைக்கும் ஒரு மர்ம அமைப்பின் உளவாளிகள் அவர்களது திட்டத்தை தடுக்க விடாமல் செய்வதற்காக ஒரு அப்பாவி மனிதனை ஐக்கிய அமெரிக்கா முழுவதும் துரத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டிருந்தது.[3] இதுவரை தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே ஒரு சிறந்த திரைப்படமாக இது கருதப்படுகிறது.[4][5][6]

உசாத்துணை[தொகு]