நாராயணபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாராயணபாலன்
பாலப் பேரரசின் மன்னன்
ஆட்சிக்காலம்9லிருந்து 10ஆம் நூற்றாண்டு
முன்னையவர்முதலாம் விக்ரகபாலன்
பின்னையவர்ராஜ்யபாலன்
துணைவர்மம்மா (கோவிந்தராஜனின் மகள்) [1]
குழந்தைகளின்
பெயர்கள்
ராஜ்யபாலன்
அரசமரபுபாலப் பேரரசு
தந்தைமுதலாம் விக்ரகபாலன்
தாய்லஜ்ஜாதேவி
நாராயணபாலனின் பாதல் தூண் கல்வெட்டு.

நாராயணபாலன் (Narayanapala) (9-10 ஆம் நூற்றாண்டு) இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதிகள், முக்கியமாக வங்காள மற்றும் பீகார் பகுதிகளில் ஆட்சி செய்த பால வம்சத்தின் ஏழாவது மன்னராவார்.

இவர் முதலாம் விக்ரகபாலனின் மனைவியும் காலச்சூரி இளவரசியுமான லஜ்ஜாதேவியின் மகனாவார்.[2][3] இவருக்குப் பிறகு இவரது மகன் ராஜ்யபாலன் ஆட்சிக்கு வந்தார்.[4]

கயா கோயில் கல்வெட்டு இவரது 7 வது ஆட்சி ஆண்டில் தேதியிடப்பட்டுள்ளது. இந்திய அருங்காட்சியக (பாட்னா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது) கல்வெட்டு இவரது 9 வது ஆட்சி ஆண்டில் தேதியிடப்பட்டது. பாகல்பூர் செப்புத் தகடு மானியம் இவரது 17 வது ஆட்சி ஆண்டில் தேதியிடப்பட்டது. பீகார் வோட்டிவ் படக் கல்வெட்டு இவரது 54 வது ஆட்சி ஆண்டை குறிக்கிறது. இவரது மந்திரி பட்டா குரவமிஷ்ராவின் பாதல் தூண் கல்வெட்டும் இவரது ஆட்சி பற்றிய தகவல்களை வழங்குகிறது.[5]

பல்வேறு கல்வெட்டுகள் மற்றும் வரலாற்று பதிவுகளின் வெவ்வேறு விளக்கங்களின் அடிப்படையில், வெவ்வேறு வரலாற்றாசிரியர்கள் நாராயணபாலனின் ஆட்சியை கி.பி. 854 க்கும் 917க்கும் இடையிலிருந்ததாக மதிப்பிடுகின்றனர்.[6]

பிரதிகாரப் பேரரசர் மிகிர போஜன் இவரை வீழ்த்தி தனது இராச்சியத்தை விரிவாக்கினார்.[7]:21

மேற்கோள்கள்[தொகு]

  1. Furui, Ryosuke (January 2016). "Bharat Kala Bhavan Copper Plate Inscription of Rājyapāla, year 2: Re-edition and Reinterpretation". Puravritta: 53. https://www.academia.edu/22297247. 
  2. Mishra, Vijayakanta (1979). Cultural Heritage of Mithila. Mithila Prakasana. பக். 39. https://books.google.com/books?id=8FBuAAAAMAAJ. 
  3. Akshay Kumar Maitreya (1987). The fall of the Pāla Empire. University of North Bengal. பக். 1. https://books.google.com/books?id=O05uAAAAMAAJ&q=%22Narayanapala+claimed+that+his+mother+Lajjadevi+belonged+to+the+Haihaya-family%22. 
  4. Ishtiaq Hussain Qureshi (1967). A Short History of Pakistan: Pre-Muslim period, by A. H. Dani. Karachi: University of Karachi. பக். 181. https://books.google.com/books?id=mrk5AQAAIAAJ. 
  5. Sinha, Bindeshwari Prasad (1977). Dynastic History of Magadha, New Delhi: Abhinav Publications, pp.192-4
  6. Susan L. Huntington (1 January 1984). The "Påala-Sena" Schools of Sculpture. Brill Archive. பக். 32–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-06856-2. https://books.google.com/books?id=xLA3AAAAIAAJ&pg=PA32. 
  7. Sen, S.N., 2013, A Textbook of Medieval Indian History, Delhi: Primus Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789380607344

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணபாலன்&oldid=3798507" இலிருந்து மீள்விக்கப்பட்டது