நாயுருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயுருவி
நாயுருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Caryophyllales
குடும்பம்:
பேரினம்:
Achyranthes
இருசொற் பெயரீடு
Achyranthes aspera

நாயுருவி அல்லது அபமார்க்கி (தாவரவியல் பெயர்; அசய்ரந்தெஸ் அஸ்பெர (Achyranthes aspera) என்பதாகும். ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.இதன் நெற்று விலங்குகளின் மேல் ஒட்டிச் சென்று வேறு இடங்களில் பரவும்.

பெயர்கள்[தொகு]

நாயுருவிக்கு அபமார்க்கி, நாய்க்குருவி, சரமஞ்சரி, சனம், சுவானம், சேகரி, மாமுனி போன்ற வேறு பெயர்கள் உள்ளன. இவற்றின் விதைகள் (அரிசி) கொண்ட சிறு நெற் கதிர் போல காணப்படுவதால் கதிரி என அழைக்கப்படுகிறது. நாட்டினத்தைக் குறிக்க ‘நாய்’ எனும் பெயர் பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் தாவரத்திலிருந்து ‘உருவி’ உடலில் ஒட்டிக்கொள்வதால், ‘நாயுருவி’ என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.[1] மேலும் இதற்கு கஞ்சரி. சிகிசிரம், கதிரி, கரமஞ்சரி, சிறுகடலாடி, சகரிகம், கொட்டாவி, நாயரஞ்சி போன்ற வேறு பெயர்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

விளக்கம்[தொகு]

நாயுருவியானது சிறுசெடி வகையைச் சார்ந்தது. இதன் இலைகளில் மென்மையான ரோம வளரிகளோடு, தலைகீழ் முட்டை வடிவத்தில் காணப்படும். இலைகளும் தண்டும் சிவந்து காணப்படுவது செந்நாயுருவி வகையாகும். இந்தத் தாவரமானது பீட்டா கரோடீன் (Beta-Carotene), வைட்டமின் – சி, கால்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

நாயுருவின் வேறு மொழிப்பெயர்கள்[தொகு]

 1. தெலுங்கு:உட்டாரெனி(Uttareni)
 2. கன்னடம்:உட்டரனீ(Uttaranee)
 3. மலையாளம்:கடலாட்(Kadalad)
 4. இந்தி:சிர்-சிர்(Chir-Chir)
 5. சமஸ்கிருதம்:அபமர்க(Apamarga)
 6. ஆங்கிலம்:ரப்சாப்(அ)ப்ரிகிலி ரப்சாப்(Rough Chaff or Prickly Chaff)

வாழிடம்[தொகு]

 1. இது இந்தியாவில் எங்கும் வளரக்கூடிய பூண்டுச் செடி.
 2. இதில் செந்நாயுருவி என்றொரு வகையுள்ளது.

நாயுருவின் பண்புகள்[தொகு]

 1. சுவை:கைப்பு ,துவர்ப்பு ,கார்ப்பு
 2. தன்மை:வெப்பம்
 3. பிரிவு:கார்ப்பு

குணம்[தொகு]

 1. வேரினால் அழகுண்டாகும் இலை, கீழ்வாய்க்குரிதிப்போக்கையும், கழிச்சல், ஐயநோய், வியர்வை, வெள்ளை இவைகளையும் போக்கும்.

செந்நாயுருவி[தொகு]

செந்நாயுருவின் பயன்கள்[தொகு]

 1. இது வீக்கம்,பாண்டு,காமாலை இவை நீக்கும்.
 2. வேர்ப் பொடியுடன் சிறிது மிளகு பொடியும் ,தேனும் சேர்த்துக்கொடுக்க இருமல் நீங்கும்
 3. நாயுருவி விதையை அரிசி கழுவிய நீருடன் உட்கொண்டால் மூலம் நீங்கும்
 4. மூளை நோய்களை நீக்கும்.

குறிப்பு[தொகு]

இவ்விரு வகைளிலும் செந்நாயுருவி சிறப்புடைது.

மேற்கோள்கள்[தொகு]

[2]

 1. டாக்டர் வி.விக்ரம் குமார் (3 நவம்பர் 2018). "நோய் உருவும் நாயுருவி!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2018.
 2. வைத்திய இரத்தினம் க.ச.முருகேச முதலியார். நாயுருவி. தமிழ் நாடு சித்த மருத்துவ வாரியம் சென்னை 600105. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயுருவி&oldid=3862528" இலிருந்து மீள்விக்கப்பட்டது