நாபா கிசோர் ரே
நாபா கிசோர் ரே Naba Kishore Ray | |
---|---|
பிறப்பு | ஒடிசா, இந்தியா | திசம்பர் 5, 1940
இறப்பு | மே 8, 2013 | (அகவை 72)
தேசியம் | இந்தியர் |
துறை |
|
அறியப்படுவது | மூலக்கூறுகளின் கட்டமைப்பு |
விருதுகள் |
நாபா கிசோர் ரே (Naba Kishore Ray) இந்தியாவைச் சேர்ந்த கோட்பாட்டு மற்றும் கணக்கீட்டு வேதியியலாளர் ஆவார். 1940- 2013 [1] ஆம் ஆண்டு காலத்தில் இவர் வாழ்ந்தார். மூலக்கூறுகளின் கட்டமைப்பு குறித்த ஆய்வுகளுக்கு பெயர் பெற்றவராக இருந்தார். [2] டிசம்பர் 5, 1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று இந்திய மாநிலமான ஒடிசாவில் கிசோர் பிறந்தார்.[3] மூலக்கூறு சுற்றுப்பாதை மற்றும் மிதக்கும் கோள காசியன் சுற்றுப்பாதை முறைகளைப் பயன்படுத்தி மூலக்கூறுகளையும், அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் எலக்ட்ரான் அடர்த்தி மற்றும் வேகப் பகிர்வு தொடர்பான ஆய்வுகளை கிசோர் மேற்கொண்டார். மேற்பரப்புகளில் மூலக்கூறுகளின் வினைத்திறன் பற்றிய பணிகளையும் ஆய்வு செய்து இப்பொருள் குறித்த புரிதலை விரிவுபடுத்தினார்.[4]
விஞ்ஞான ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் வேதியியல் அறிவியலுக்கான பங்களிப்புகளுக்காக 1983 ஆம் ஆண்டில், மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நகர் பரிசை கிசோருக்கு வழங்கியது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Deceased Honorary Fellows, Foreign Fellows and Fellows". Archived from the original on 28 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் 12 November 2016.
- ↑ "Odiya Celebrities". Odiya.org. 2016. Archived from the original on 6 March 2014. பார்க்கப்பட்ட நாள் 1 December 2016.
- ↑ "Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners" (PDF). Council of Scientific and Industrial Research. 2016. Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 1 December 2016.
- ↑ "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. பார்க்கப்பட்ட நாள் 12 November 2016.
புற இணைப்புகள்
[தொகு]Alan Hinchliffe (2008). Chemical Modelling: Applications and Theory. Royal Society of Chemistry. pp. 309–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-248-7.