நாதுல்லாவின் சகமானர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாதுல்லாவின் சகமானர்கள்
பொ.ச.950–1197
Map
நாதுல்லா சகமானர்களின் ஆட்சியின் போது வெளியிடப்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்.[1]
தலைநகரம்நாதுல்லா
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
பொ.ச.950
• முடிவு
1197
தற்போதைய பகுதிகள்இந்தியா

நாதுல்லாவின் சகமானர்கள் (Chahamanas of Naddula) மேலும் நாதுல்லாவின் சௌகான்கள் எனவும் அறியப்படும் இவர்கள் இந்தியாவின் இன்றைய இராஜஸ்தானில் ஒரு பகுதியில் ஆண்ட வம்சாவழியினர் ஆவர். இவர்கள் 10 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தங்கள் தலைநகரான நாதுல்லாவை (இன்றைய ராஜஸ்தானில் உள்ள நாதோல்) சுற்றியுள்ள மார்வார் பிரதேசத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் இராஜபுத்திரர்களின் சகமான (சௌகான்) குலத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் சாகம்பரியின் சௌகான்களின் கிளையினம் ஆவர். இவர்களின் நிறுவனர், இலட்சுமணன் (ராவ் லகா என்று அழைக்கப்பட்டார்). 10ஆம் நூற்றாண்டின் சாகம்பரி ஆட்சியாளர் முதலாம் வாக்பதிராஜாவின் மகனாவார். இவரது சகோதரர் சிம்மராஜா அவர்களின் தந்தைக்குப் பிறகு சாகம்பரி ஆட்சியாளரானார். [2] அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் மால்வாவின் பரமாரர்களுடனும், சோலாங்கியர்களுடனும், கசனவித்துகளுடனும், சாகம்பரியின் சகமானார்களுடனும் போரிட்டனர்.[3] கடைசி ஆட்சியாளர் ஜெயத-சிம்மன் பொ.ச.1197இல் குத்புத்தீன் ஐபக்கால் தோற்கடிக்கப்பட்டார்.[2]

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]