நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
Appearance
நூலாசிரியர் | கி. ராஜநாராயணன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | நாட்டாரியல் |
வகை | சிறுகதைகள் |
வெளியீட்டாளர் | சாகித்திய அகாதமி |
வெளியிடப்பட்ட நாள் | 2007 |
பக்கங்கள் | 1220 |
ISBN | 9788126008919 |
நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் என்பது கி. ராஜநாராயணன் தலைமைத் தொகுப்பாளராக இருந்து வெளியிடப்பட்ட நாட்டார் கதைத் தொகுப்பு நூலாகும். இந்நூலினை தொகுப்பதில் இவருடன், சண்முகசுந்தரம், கழனியூரன், பாரதிதேவி ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். தமிழ் மொழியில் செவிவழிக் கதைகளாக உலாவிய 378 நாட்டுப்புறக் கதைகளை இந்நூலில் தொகுத்துள்ளனர்.[1]
ஆயிரத்து இருநூற்று இருபது பக்கங்கள் கொண்ட இந்நூலினை சாகித்திய அகாதமி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்நூலின் ஆங்கிலப் பதிப்பானது ப்ரீதம் சக்ரவர்த்தியின் மொழிப்பெயர்ப்பில் 2009ஆம் ஆண்டில் பிளாப்ட் பதிப்பகம் (Blaft Publications) வெளியிடப்பட்டது.