நாகினா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகினா கான்
Nagina Khan
கைபர் பக்துன்க்வா-உறுப்பினர்
பதவியில்
29 மே 2013 – 28 மே 2018
தொகுதிபெண்களுக்கான தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்பாக்கித்தானியர்

நாகினா கான் (ஆங்கிலம்: Nagina Khan; உருது: نگینہ خان) கைபர் பக்துன்க்வாவின் 10வது மாகாண சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய பாக்கித்தான் அரசியல்வாதி ஆவார்.

கல்வி[தொகு]

கான் முதுகலைப் பட்டம் பெற்றவர்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

கான் 2013 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாக்கித்தான் தெஹரீக்-இ-இன்சாப்பின் வேட்பாளராக கைபர் பக்துன்க்வா மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் கைபர் பக்துன்க்வா சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான கைபர் பக்துன்க்வா சட்டமன்றத்தின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றினார்.[1]

மே 2016-ல், கைபர் பக்துன்க்வா மாகாண சட்டசபையில் பெண்கள் காகஸ் அமைப்பதற்கான தீர்மானத்தில் கான் இணைந்தார்.[4] மார்ச் 2018-ல், கான் 2018 பேரவை தேர்தலில் குதிரை பேரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து, இம்ரான் கான் இவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்து, இவரது நிலைப்பாட்டை விளக்குமாறு கடிதம் அனுப்பினார்.[5] இதனைத் தொடர்ந்து கான், ஏப்ரல் 2018-ல், பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப்விலிருந்து விலகி பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Profile". www.pakp.gov.pk. KP Assembly. Archived from the original on 7 June 2017. பார்க்கப்பட்ட நாள் 5 January 2018.
  2. "With 11 reserved seats: PTI builds up strength in KP Assembly". https://www.dawn.com/news/1014574. 
  3. "PTI wins 10, JUI-F, PML-N 3 seats each in KP PA". https://www.thenews.com.pk/archive/print/433383. 
  4. "Establishment of the Women Caucus". www.pakp.gov.pk. KP Assembly. Archived from the original on 3 July 2017. பார்க்கப்பட்ட நாள் 5 January 2018.
  5. "PTI chairman names and shames party members who 'sold votes' in Senate polls". The Dawn. April 18, 2018.
  6. "Three PTI lawmakers join PPP ranks in K-P as defections continue - The Express Tribune". 26 April 2018. https://tribune.com.pk/story/1696031/1-three-pti-lawmakers-join-ppp-ranks-k-p-defection-continues/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகினா_கான்&oldid=3685600" இலிருந்து மீள்விக்கப்பட்டது