உள்ளடக்கத்துக்குச் செல்

நாகபட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகபட்டர்
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசை நிறுவியர்
ஆட்சிக்காலம்கிபி 730 - 760
பின்னையவர்காகுஸ்தன்
அரசமரபுகூர்ஜர-பிரதிகார வம்சம்

முதலாம் நாகபட்டர் (Nagabhata I) (ஆட்சிக் காலம் 730-760), மேற்கு இந்தியாவில் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசை நிறுவியர் ஆவார். முதலாம் நாகபட்டர், உஜ்ஜைன் நகரத்தை தலைநகராகக் கொண்டு மாளவம் எனப்படும் அவந்தி பகுதிகளை ஆண்டவர். பின்னர் தற்கால தெற்கு இராஜஸ்தான் மற்றும் வடக்கு குஜராத் பகுதிகளான கூர்ஜர நாட்டை தன் ஆட்சியில் விரிவு படுத்தியவர். சிந்துவிலிருந்து படையெடுத்த அரேபியப் படைகளை வென்றார். நாகபட்டர் கிபி 730 முதல் 760 முடிய கூர்ஜர-பிரதிகாரப் பேரரசராக ஆட்சி செய்தவர்.

நாகபட்டரின் வழித்தோன்றலான மிகிர போஜனின் குவாலியர் கல்வெட்டுக் குறிப்புகள், நாகபட்டரின் பேரன் வத்சராஜன் அவந்தியை 783 முதல் 784 முடிய ஆண்டதாக கூறுகிறது.

படையெடுப்புகள்[தொகு]

அரபுப் படையெடுப்புகள்[தொகு]

அப்பாசியக்கலீபகத்தின் சிந்து மாகாண ஆளுநரின் அரேபியப் படைகள் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளின் மீது படையெடுத்து வென்று வருகையில், உஜ்ஜைன் நகரத்தை முற்றுகையிட்டதாக அல்-பாலாதுரி எனும் அரபு வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். ஆனால் போரின் முடிவில் உஜ்ஜைன் அரேபியர்களின் முற்றுகை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. [1]

கூர்ஜர-பிரதிகாரப் பேரரசர் நாகபட்டர், அரேபியப் படைகளை எதிர்கொள்ள அரேபிய எதிர்ப்பு கூட்டணி அமைப்பை உருவாக்கியதாக ஆர். வி. சோமணி எனும் வரலாற்று ஆய்வாளர் கருத்தியலாகக் கொள்கிறார். [2]

இராஷ்டிரகூடர்களின் படையெடுப்புகள்[தொகு]

இராஷ்டிரகூடப் பேரரசர் தந்திதுர்கன், கிபி 760ல் நாகபட்டரை வென்றதாக, குஜராத்தின் சஞ்சன் கல்வெட்டுகள் கூறுகிறது.

வாரிசுகள்[தொகு]

குவாலியர் கல்வெட்டுகள், காகுஸ்தன் மற்றும் தேவராஜன் ஆகியோர் நாகபட்டரின் பெயர் தெரியாத உடன்பிறப்பாளனின் மகன்கள் எனக் கூறுகிறது.[3]. நாகபட்டரின் பேரன் வத்சராஜன் அவந்தியை 783 முதல் 784 முடிய ஆண்டதாக கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதாரங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகபட்டர்&oldid=2712137" இலிருந்து மீள்விக்கப்பட்டது