நவ்ப்பாக்ட்டஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவ்ப்பாக்ட்டஸ்
Ναύπακτος
நஃப்பக்டோஸ்; கோட்டையிலிருந்து தோற்றம்
நஃப்பக்டோஸ்; கோட்டையிலிருந்து தோற்றம்
அமைவிடம்

No coordinates given

Location within the regional unit
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: மேற்கு கிரேக்கம்
மண்டல அலகு: ஏட்டோலியா-அகார்னானியா
நகராட்சி: நாஃபக்டியா
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நிர்வாக அலகு
 - மக்கள்தொகை: 19,768
 - பரப்பளவு: 159.9 km2 (62 sq mi)
 - அடர்த்தி: 124 /km2 (320 /sq mi)
சமூகம்
 - மக்கள்தொகை: 31,594
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (மத்தியில்): 15 m (49 ft)
அஞ்சல் குறியீடு: 303 xx
தொலைபேசி: 26340
வாகன உரிமப் பட்டை: ME
வலைத்தளம்
www.nafpaktos.gr

நவ்ப்பக்ட்டஸ் (Nafpaktos, கிரேக்கம்: Ναύπακτος‎ ) என்பது மேற்கு கிரேக்கத்தின் ஏட்டோலியா-அகார்னானியாவில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது கொரிந்து வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் 3 கிமீ (2 மைல்) மேற்கே மோர்னோஸ் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.

பெலோபொன்னேசியப் போரில் முக்கியமான ஏதெனியன் கடற்படை நிலையமான இதற்கு நௌபக்டோஸ் ( Ναύπακτος , Latinized Naupactus ) என்று பெயரிடப்பட்டது. கொரிந்து வளைகுடாவுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் உத்தியியல் ரீதியாக முக்கியமான இடமான இது சிலுவைப் போர்கள் மற்றும் உதுமானிய-வெனிஸ் போர்களின் போது பலமுறை கை மாறியது. இது 15 ஆம் நூற்றாண்டில் வெனிஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இதன் பெயரானது வெனிஸ் வடிவில் லெபாண்டோ என்று அறியப்பட்டது. இது 1499 இல் உதுமானிய பேரரசிடம் வீழ்ந்தது. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உதுமானிய கடற்படையால் கடற்படை தளமாக பயன்படுத்தப்பட்டது. இது 1571 இல் லெபாண்டோ போரில் ஹோலி கூட்டணியின் தீர்க்கமான வெற்றியின் தளமாக இருந்தது. 1687-1699 இல் வெனிஸ் கட்டுப்பாட்டின் இருந்த குறுகிய காலத்தைத் தவிர, 1829 இல் கிரேக்கத்தின் விடுதலை வரை லெபாண்டோ உதுமானியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

நவீன நகராட்சி 1946 இல் உருவாக்கப்பட்டது. ஆனால் 2010 இல் மேற்கொள்ளபட்ட சீர்திருத்தத்தில் இது நாஃப்பக்டியா பெருநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[2] நகர மாவட்டமானது 159,947 சதுர கிலோமீட்டர்கள் (61,756 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது, 2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 20,000 க்கு நெருக்கமாக உள்ளது.[3]

இந்த நகரம் ஆன்டிரியோவிலிருந்து வடகிழக்கே 9 கிமீ (6 மைல்), பட்ராசுக்கு வடகிழக்கே 18 கிமீ (11 மைல்), மிசோலோங்கிக்கு கிழக்கே 35 கிமீ (22 மைல்), அக்ரினியோவின் தென்கிழக்கே 45 கிமீ (28 மைல்) தொலைவில் உள்ளது. கிரேக்க தேசிய சாலை 48 / E65 (ஆண்டியோ - நாபாக்டோஸ் - தெல்பி - லிவாடியா) நகரத்திற்கு வடக்கே செல்கிறது. இது அக்ரினியோவிற்கு அடுத்து ஏட்டோலியா- அகார்னானியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

குறிப்புகள்[தொகு]

  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. "ΦΕΚ B 1292/2010, Kallikratis reform municipalities". Government Gazette.
  3. "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்ப்பாக்ட்டஸ்&oldid=3476544" இலிருந்து மீள்விக்கப்பட்டது