நவூர், ஆர்மீனியா
Appearance
நவூர்
Նավուր | |
---|---|
ஆள்கூறுகள்: 40°51′41″N 45°19′3″E / 40.86139°N 45.31750°E | |
நாடு | ஆர்மீனியா |
மாகாணம் | தாவுசு |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,065 |
நேர வலயம் | ஒசநே+4 (அர்மீனிய நேரம்) |
சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து நவூர், ஆர்மீனியா |
நவூர் (Navur, (ஆர்மீனியம்: Նավուր) ஆர்மீனியாவின் தவுசு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். மாநிலங்களுக்கு இடையேயான ஜி-36 சாலை இவ்வூர் வழியாக செல்கிறது. இவ்வூரின் கிழக்கே 3 கிமீ தொலைவில் பெர்த் நகரம், வடக்கே 3 கிமீ தொலைவில் சின்சின் கிராமம், மேற்கில் 15 கிமீ தொலைவில் இசேவன் நகரம் ஆகியவையும், தெற்கே மக்கள் வசிக்காத மலைத்தொடர்களும் நீண்டுள்ளது. நவூர் கிராமம் தவுசு, அகும் ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
இவ்வூரில் கிமு III-I மிலேனியம் காலக் கோட்டைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.[2]
இங்குள்ள மக்கள் கால்நடை வளர்ப்பதிலும், தானியங்களையும் தீவனப் பயிர்களையும் வளர்ப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒரு பள்ளி, ஒரு மருத்துவ நிலையம், ஒரு பண்பாட்டு மையம், ஒரு மழலையர் பள்ளி ஆகியன உள்ளன.
காட்சியகம்
[தொகு]-
நவூரின் காட்சி
-
மரியாம் மேரி மடாலயம், நவூர்
-
இராணுவ அதிகாரி அந்திரானிக்கின் சிலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistical Committee of Armenia. "The results of the 2011 Population Census of Armenia" (PDF).
- ↑ "Список памятников". Archived from the original on 2014-02-01.
வெளி இணைப்புகள்
[தொகு]- Report of the results of the 2001 Armenian Census, Statistical Committee of Armenia