நவீன இயற்பியல்
Appearance
நவீன இயற்பியல் (modern physics) என்பது அறிவியல் மற்றும் பொறியியல் கருவிகளின் உதவியுடன் பருப்பொருள்களுடனான தொடர்புகளின் அடிப்படை செயல்முறைகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சி ஆகும். இச்சொல் பொதுவாக 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அதற்குப் பிறகும் உருவாக்கப்பட்ட இயற்பியலின் கிளைகளைக் குறிக்கவும், அல்லது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இயற்பியலால் தாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள கிளைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.[1]
நவீன இயற்பியல் என்பது செவ்வியல் இயற்பியல், இயற்பியலின் சீர்மரபு ஒப்புரு, மற்றும் குவாண்டம் இயங்கியல், சார்புக் கோட்பாடு போன்ற பலவற்றை உள்ளடக்கிய கோட்பாட்டு இயற்பியல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.