நவாப்கஞ்ச் தேசிய பூங்கா
நவாப்கஞ் தேசிய பூங்கா Nawabganj National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
அமைவிடம் | நவாப்கஞ்ச், தினஜ்பூர் மாவட்டம், வங்காளதேசம் |
ஆள்கூறுகள் | 25°27′06″N 89°03′13″E / 25.4517524°N 89.0534941°E |
பரப்பளவு | 517.61 hectares |
நிறுவப்பட்டது | 24 அக்டோபர் 2010 |
நவாப்கஞ்ச் தேசிய பூங்கா (உள்ளூரில் பஞ்சபதி காடு என்று அழைக்கப்படுகிறது) (வங்காள மொழி: নবাবগঞ্জ জাতীয় উদ্যান) பன்னாடு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் வகை IV தேசிய பூங்கா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதி ஆகும். இந்த பூங்கா தினஜ்பூர் மாவட்டத்தின் கீழ் நவாப்கஞ்ச் உபாசிலா சதாருக்கு வடமேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[1]
இது ஜகந்நாத்பூர், அரிலகுர், பாரா ஜலால்பூர், அலோக்துதி, தர்பங்காட், ரசூல்பூர் மற்றும் நவாப்கஞ்ச் வனப்பகுதியின் கட்காடியா கிறிசுதாபூர் பகுதியைக் கொண்டுள்ளது.[2] நவாப்கஞ்ச் தேசிய பூங்காவில் அதிக அளவில் காணப்படும் தாவரங்கள் குங்கிலியம் (சோரியா ரோபசுதா) மற்றும் தேக்கு ஆகும்.[2] ஜிமெலினா ஆர்போரியா, யூகலிப்டஸ் ரெக்னான்ஸ், நாவல் (சிஜிஜியம் குமினி), அகாசியா ஆரிகுலிபார்மிசு மற்றும் சில வகையான ஆர்க்கிடேசியும் காணப்படுகின்றன.[2] வன விலங்குகளில் வங்காள நரி, காட்டுப்பூனை, மீன்பிடிப் பூனை மற்றும் பாம்பு ஆகியவை அடங்கும்.
தாவரங்கள், விலங்கினங்கள், இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்திற்காக 24 அக்டோபர் 2010 அன்று வங்காளதேச அரசாங்கத்தால் இந்த பூங்கா அதிகாரப்பூர்வமாகத் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[1][3] இது 517.61 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "National Parks". பார்க்கப்பட்ட நாள் 8 June 2020."National Parks". bforest.gov.bd. Retrieved 8 June 2020.
- ↑ 2.0 2.1 2.2 (in bn)bangla.bdnews24.com. http://bangla.bdnews24.com/lifestyle/article925200.bdnews. பார்த்த நாள்: 10 June 2020.
- ↑ 3.0 3.1 "Biodievsrity Flora_NCS" (PDF). பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.