நவகோன் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வங்காளதேசத்தில் நவகோன் மாவட்டத்தின் அமைவிடம்

நவகோன் மாவட்டம் (Naogaon District ) (வங்காள: নওগাঁ জেলা தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ராஜசாகி கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் வடமேற்கில், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தை ஒட்டி அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நவகோன் நகரம் ஆகும்.[1]

மாவட்ட எல்லைகள்[தொகு]

3435.65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நவகோன் மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலமும், தெற்கில் ராஜசாகி மாவட்டம் மற்றும் நத்தோர் மாவட்டங்களும், கிழக்கில் ஜெய்பூர்ஹட் மாவட்டம் மற்றும் போக்ரா மாவட்டங்களும், மேற்கில் சப்பைநவாப்கஞ்ச் மாவட்டம் மற்றும் மேற்கு வங்காளமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

ராஜசாகி கோட்டத்தில் உள்ள நவகோன் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பதினொன்று துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் மூன்று நகராட்சிகளும், 99 கிராம ஒன்றியக் குழுக்களும், 2779 கிராமங்களும் உள்ளது.[2] இதன் அஞ்சல் சுட்டு எண் 6500 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0741 ஆகும். இம்மாவட்டம் ஆறு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

அத்ராய், துளசி, புனர்பாபா, சோட்டா ஜமுனா, சிப் போன்ற ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்ட இம்மாவட்டத்தில், நெல், கரும்பு, கோதுமை, மா, பலா, வாழை, சணல், எண்ணெய் வித்துக்கள் அதிகம் பயிரிடப்படுகிறது.

மக்கள் தொகையியல்[தொகு]

3435.65 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 26,00,157 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 13,00,227 ஆகவும், பெண்கள் 12,99,930 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 757 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 48.2 % ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

முக்கிய கல்வி நிலையங்கள்[தொகு]

இம்மாவட்டத்தின் முக்கிய கல்வி நிலையங்கள்: பராக்கோல் தொழில்நுட்பம் மற்றும் வணிக மேலாண்மை கல்லூரி, கங்கங்பூர் சாகித் சியா தொழில்நுட்ப கல்லூரி, ஜாஹங்கிபூர் அரசு கல்லூரி, மகாதேவப்பூர் நாஷிப்பூர் அரசு கல்லூரி, பந்தைகாரா தொழில்நுட்ப மற்றும் வணிக மேலாண்மைக் கல்லூரி, அத்ராய்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

24°54′N 88°45′E / 24.90°N 88.75°E / 24.90; 88.75ஆள்கூறுகள்: 24°54′N 88°45′E / 24.90°N 88.75°E / 24.90; 88.75

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவகோன்_மாவட்டம்&oldid=3218054" இருந்து மீள்விக்கப்பட்டது