நலிந்த எக்சு நோய்த்தொகை
நலிந்த எக்சு நோய்த்தொகை Fragile X syndrome | |
---|---|
ஒத்தசொற்கள் | மார்ட்டின் பெல் நோய்த்தொகை,[1] எசுகலந்தே நோய்த்தொகை |
நலிந்த எக்சு நோய்த்தொகை உள்ள பையன் | |
சிறப்பு | மருத்துவ மரபியல், குழந்தை மருத்துவம் உளநோயியல் |
அறிகுறிகள் | அறிதிறன் குறைபடு, நீண்ட குறுகலான முகம், பெரிய காதுகள், நெளிவான விரல்கள், பெரிய விந்தகங்கள்[1] |
சிக்கல்கள் | தன்னுழம்பல் நோய் இயல்புகள், வலிப்புகள்[1] |
வழமையான தொடக்கம் | நோய் அறிகுறைகள் இரண்டாம் அகவையில் வெளிப்படும்.[1] |
கால அளவு | வாழ்நாள் முழுவதும்[2] |
காரணங்கள் | மரபியல் எக்சு ஓங்கல் சார்ந்த கோளாறு[1] |
நோயறிதல் | மரபியல் ஓர்வுகள்[2] |
சிகிச்சை | ஆதரவான அக்கறை, மிகத் தொடக்க இடையீடுகள்[2] |
நிகழும் வீதம் | ஆண்களில் 4,000 பேருக்கு ஒருவர்; பெண்களில் 8,000 பேருக்கு ஒருவர்[1] |
நலிந்த எக்சு நோய்த்தொகை (Fragile X syndrome) (FXS) என்பது ஒரு மரபியல் கோளாறு ஆகும்.[1] அறிகுறிகள் பெரும்பாலும் இலேசானது முதல் மிதமான அறிவார்ந்த இயலாமையாக வெளிப்படலாம்.[1] உடல் அறிகுறிகளாக, நீண்ட குறுகலான முகம், பெரிய காதுகள், நெளிவான விரல்கள், பெரிய விந்தகங்களும் அமையும்.[1] இவர்களில் மூன்றில் ஒருவருக்கு சமூக ஊடாட்டச் சிக்கல்கள், மெதுவாக பேசவரல் போன்ற தன்னுழம்பல் நோய் இயல்புகளும் ஏற்படலாம்.[1] மிகைச் செயல்பாடு பொதுவாகவும் 10% பேருக்கு வலிப்புகளும் ஏற்படலாம்.[1] பெண்களை விட ஆண்களே மிகவும் தாக்கமுறுகின்றனர்.[1]
இதற்கு மருத்துவம் ஏதும் கிடையாது.[2] மிகத் தொடக்கநிலை இடையீட்டால் அனைத்து முழுத்திறமைகளையும் வென்றெடுக்கும் வாய்ப்பு உண்டு.[3] இவ்வகை இடையீடுகளாக, சிறப்புக் கல்வி, பேச்சு மருத்துவம், இயன்மருத்துவம், நடத்தைசார் மருத்துவம் ஆகியன அமையலாம்.[2][4]இதனால் ஏற்படும் வலிப்புகள், உணர்வுச் சிக்கல்கள், கடும் நடத்தைகள் அல்லது ADHD ஆகியவற்றுக்கு மருந்துகளைத் தரலாம்.[5] இந்நோய்த்தொகை ஆண்களில் 10,000 பேர்களில் 1.4 பேருக்கும் பெண்களில் 10,000 பேர்களில் 0.9 பேருக்கும் அமைகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 "fragile X syndrome". Genetics Home Reference. April 2012. Archived from the original on 9 October 2016. பார்க்கப்பட்ட நாள் 7 October 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Facts about Fragile X Syndrome". National Center on Birth Defects and Developmental Disabilities Home CDC (in அமெரிக்க ஆங்கிலம்). 2 February 2017. Archived from the original on 10 May 2017. பார்க்கப்பட்ட நாள் 10 May 2017.
- ↑ "What are the treatments for Fragile X syndrome?". www.nichd.nih.gov. Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
- ↑ "Therapy Treatments". NICHD. Archived from the original on 5 May 2017. பார்க்கப்பட்ட நாள் 10 May 2017.
- ↑ "Medication Treatments". NICHD. Archived from the original on 5 May 2017. பார்க்கப்பட்ட நாள் 10 May 2017.
- ↑ "Data and Statistics Fragile X Syndrome (FXS)" (in en-us). Centers for Disease Control and Prevention. 2018-08-09. https://www.cdc.gov/ncbddd/fxs/data.html.
வெளி இணைப்புகள்
[தொகு]வகைப்பாடு | |
---|---|
வெளி இணைப்புகள் |