நரேந்தர் இரன்பீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரேந்தர் இரன்பீர்
Narender Ranbir
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு10 சூலை 1989 (1989-07-10) (அகவை 34)
சோனிபத், அரியானா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
மாற்றுத்திறன் வகைப்பாடுஎப்44
நிகழ்வு(கள்)ஈட்டி எறிதல்
சாதனைகளும் விருதுகளும்
மாற்றுத் திறனாளர் இறுதி2016
பதக்கத் தகவல்கள்
தடகளம்
நாடு  இந்தியா
இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014இஞ்சியோன் ஈட்டி எறிதல் – எப்44

நரேந்தர் இரன்பீர் (Narender Ranbir) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். 1989 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இணை ஒலிம்பிக்கு போட்டிகளில் இந்தியாவின் சார்பாக இவர் ஈட்டி எறிதல் வீரராக விளையாடி வருகிறார். எப்44 வகையிலான ஈட்டி எறிதல் போட்டிகளில் நரேந்தர் பங்கேற்கிறார்.[1] பிரேசில் நாட்டின் இரியோ டி செனிரோவில் நடந்த 2016 ஆம் ஆண்டு இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் இவரது தேடலுக்கு முன்னதாக இணை விளையாட்டு வெற்றியாளர்கள் திட்டத்தின் கீழ் கோ சுபோர்ட்சு அறக்கட்டளை இவருக்கு ஆதரவளித்தது. [2]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

நரேந்தருக்கு பிறவியிலேயே இடது காலில் குறைபாடு இருந்துள்ளது. ஆரம்பத்தில் ஓட்டப்பந்தய வீரராக இருந்த நரேந்தர், நாள்பட்ட முதுகுப் பிரச்சனைகளால் தடகளப் போட்டிகளைக் கைவிட வேண்டியிருந்தது. விளையாட்டின் மீதான ஆர்வம் அவரை ஈட்டி எறிதலுக்கு விரைவாக மாறியது. [3]

தொழில்[தொகு]

ஈட்டி எறிதலுக்குப் பிறகு, நரேந்தர் தொடர்ந்து உயர்ந்த மட்டத்தில் செயல்பட்டு வருகிறார். 2012 ஆம் ஆண்டு இலண்டன் நகரத்தில் நடைபெற்ற இணை ஒலிம்பிக்கு போட்டிகளில் ஆறாவது இடத்தைப் பிடித்தார், அதன் பிறகு இவர் இலியோனில் நடந்த உலக வெற்றியாளர் பதக்கத்தைத் தவறவிட்டு நான்காவது இடத்தைப் பிடித்தார். நரேந்தரின் சிறந்த ஆட்டம் 2014 ஆம் ஆண்டு இஞ்சியோனில் நடந்த இணை ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதாகும். [4]

சாதனைகள்[தொகு]

இணை ஒலிம்பிக்கு

ஆண்டு இடம் நிகழ்வு புள்ளி விளைவு
2012 இலண்டன் ஈட்டி 49.50 6ஆவது நிலை
2016 இரியோ டி செனிரோ ஈட்டி 53.79 6 ஆவது நிலை

உலக வெற்றியாளர்

ஆண்டு இடம் நிகழ்வு புள்ளி விளைவு
2017 இலண்டன் ஈட்டி 51.07 8ஆவது நிலை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ranbir, Narender". Paralympic.org. பார்க்கப்பட்ட நாள் 13 October 2016.
  2. "Archived copy". பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.
  3. "Narender Ranbir". IndusInd For Sports. பார்க்கப்பட்ட நாள் 3 September 2016.
  4. "India's Rio Paralympics schedule: Here are the 19 athletes carrying the nation's hopes". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்தர்_இரன்பீர்&oldid=3842391" இலிருந்து மீள்விக்கப்பட்டது