நயா கிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோல்கொண்டாவின் மேலிருந்து நயா கிலாவின் தெற்குப் பகுதியில் பரந்த பார்வை.

நயா கிலா (Naya Qila) ("புதிய கோட்டை", நயா குய்லா என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் ஐதராபாத்தில் கோல்கொண்டாவிலுள்ள கோட்டையின் விரிவாக்கப்பட்டப் பகுதியாகும். [1] [2] இது முகலாயப் படைகளிடமிருந்து மேலதிக பாதுகாப்பாக 1656ஆம் ஆண்டில் சுல்தான் அப்துல்லா குதுப் ஷா அவர்களால் கட்டப்பட்டது. கோல்கொண்டா கோட்டையின் இந்த ஒருங்கிணைந்த பகுதி பல வரலாற்று கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. நயா கிலாவை எதிர்கொள்ளும் வெளிப்புற கோட்டையின் சுவர்களில் கல் மற்றும் அலங்கார பூச்சுகளில் விசித்திரமான உருவங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. இது இந்தியாவின் மிகக் குறைவாக ஆராயப்பட்ட பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். [3] இது ஒரு குழிப்பந்தாட்ட மைதானத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதால், பார்வையாளர்களுக்கான அணுகலை சிக்கலாக்குகிறது.

வரலாறு[தொகு]

சுல்தான் அப்துல்லா குதுப் ஷாவின் ஆட்சியின் போது (1625-1672) தக்காணத்தின் முகலாய ஆளுநராக இருந்த ஔரங்கசீப் 1656 சனவரியில் கோல்கொண்டா கோட்டைக்கு எதிரான ஒரு பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டார். வலிமைமிக்க முகலாய இராணுவம் பீரங்கித் தாக்குதலைத் தொடர்ந்தது. ஆனால் கோட்டை உறுதியாக இருந்தது. நான்கு மாத முற்றுகைக்குப் பிறகு, முகலாய இராணுவம் ஏப்ரல் 1656இல் பின்வாங்கியது. [4] முகலாயர்களின் கடும் தாக்குதல் காரணமாக, கோட்டை பலவீனமடைந்தது. மேலும், கோட்டை சுவர்கள் சாய்ந்து கொள்ளத் தொடங்கின. இதனால் எதிர்கால தாக்குதல்களையும், இழப்புகளைத் தவிர்க்க சுல்தான் கோட்டைச் சுவர்களை சரிசெய்யவும் கோல்கொண்டா கோட்டையை விரிவுபடுத்தவும் உத்தரவிட்டார். இதனால் நயா கிலாவின் கட்டுமானம் 1656ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேலும் சுல்தான் அபுல் ஹசன் குதுப் ஷா அவர்களாலும் கூடுதலாக கட்டுமானங்கள் சேர்க்கப்பட்டது. [5] மேலும், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஔரங்கசீப் பேரரசராக ஆனபோது, மீண்டும் அவர் கோல்கொண்டா மீது தனது பார்வையைத் திருப்பினார். அவர் ஏற்கனவே தாக்குதல் நடத்திய இடத்தை முற்றிலுமாகத் தவிர்த்தார். தற்போது அவர் பீரங்கிகள் குறிவைத்த இடம் நயா கிலா. அகழிகளைக் கொண்ட ஒரு பாறை கொத்து அமைப்பான இது கோல்கொண்டாவை இன்னும் அசைக்க முடியாததாக மாற்றியது. ஆனாலும், 1687இல் ஔரங்கசீப் கோல்கொண்டாவை தன்னுடன் இணைத்தார். [6]

குதுப் ஷாஹி வம்சத்தின் அரசக் கட்டிடக் கலைஞரான முஸ்தபா கான் இந்த கோட்டையை வடிவமைத்து கட்டினார். ஐதராபாத்தின் மக்கா பள்ளிவாசல், தோலி பள்ளிவாசல் போன்றவை இவரால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. [7]

ஈர்ப்பு[தொகு]

 • பாரசீகத் தோட்டம் ( பாக்-இ-குதுப் ), அப்துல்லா குதுப் ஷா (1625-1672) என்பவரால் கட்டப்பட்டது. [8]
 • ஹாதியன் கா ஜாத் ( "யானை அளவிலான மரம்"): 400 க்கும் மேற்பட்ட வயதான இந்த பிரபலமான பொந்தன்புளிய மரம் நயா கிலா வளாகத்தில் அமைந்துள்ளது . [9] Arab traders introduced this tree to Hyderabad[10] இது சுல்தான் முஹம்மது குலி குதுப் ஷாவுக்கு அரபு வர்த்தகர்களால் வழங்கப்பட்டது. இந்த மரம் 27.40 மீட்டர் (89 அடி) சுற்றளவு கொண்டது. இந்த மரத்தின் கிளைகளுக்கு இடையில் குகை ஒன்று உருவானது. இந்த புளிய மரத்தை மையமாகக் கொண்ட பல்வேறு கதைகள் உள்ளன. பிரபலமான கதைகளில் ஒன்று அதன் குகையுடன் தொடர்புடையது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இது சுமார் 40 மோசமான திருடர்கள் தங்களை மறைக்க உதவியது. [11] some 400 years ago.[12]
 • The Mosque of Mustafa Khan: build in memory of the royal architect of the Qutb Shahi dynasty.[13]
 • முஸ்தபா கானின் பள்ளிவாசல்: குதுப் ஷாஹி வம்சத்தின் அரச கட்டிடக் கலைஞரின் நினைவாக கட்டப்பட்டது. [13]
 • முல்லா கியாலி பள்ளிவாசல்: குதுப் ஷாஹி வம்சத்தின் அரச கவிஞரின் நினைவாக கட்டப்பட்டது. [4] முஸ்தபா கானின் பள்ளிவாசல் மற்றும் முல்லா கியாலியின்பள்ளிவாசல் இரண்டும் கோல்கொண்டாவின் ஆரம்பகால கட்டிடக்கலைக்கு முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும். [5][8][10]
 • நயா கிலா தலாப்: நயா கிலாவுக்குள் அமைந்துள்ள ஒரு நீர் தொட்டி. தற்போது, இந்த நீர்நிலை மோசமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. [5][8][10]
 • நயா கிலா தலாப்: நயா கிலாவுக்குள் அமைந்துள்ள ஒரு நீர் தொட்டி.[14] தற்போது, இந்த நீர்நிலை மோசமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. நயா கிலாவின் இடிபாடுகள் குதுப் ஷாஹி ஆட்சியின் போது நீர் வழங்கலுக்குப் பயன்படுத்தப்படும் 350 ஆண்டுகள் பழமையான மண் குழாய்களின் துண்டுகளைக் கொண்டுள்ளன. [3]

சர்ச்சைகள்[தொகு]

புதிய குழிப்பந்தாட்ட மைதானத்தின் காட்சி

2010 ஆம் ஆண்டில், தெலுங்கானா மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகமும், ஐதராபாத்து குழிப்பந்தாட்ட சங்கமும் இணிந்து வரலாற்று சிறப்புமிக்க நயா கிலாவின் வளாகத்திற்குள் ஒரு சட்டவிரோத மைதானத்தை அமைத்தது. இதன் விளைவாக பாரம்பரிய ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பை சந்தித்தது. [15][16] இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் விதிகளுக்கு எதிராக, இந்த மைதானம் சுற்றுலாப் பயணிகள் கோட்டைக்குள் நுழைவதை தடைசெய்தது. 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, இது இன்னும் செயலில் உள்ளது.[17][18]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Andhra Pradesh / Hyderabad News : Excavation in Naya Qila opposed". தி இந்து. 16 March 2011. Archived from the original on 28 April 2011. பார்க்கப்பட்ட நாள் 29 May 2011.
 2. "Naya Qila played down in Unesco list". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 May 2011. Archived from the original on 5 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2 June 2011.
 3. 3.0 3.1 "History and Culture-Qutb Shahi Style". APonline. Archived from the original on 10 January 2013. பார்க்கப்பட்ட நாள் 29 May 2011.
 4. 4.0 4.1 http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2009032450370100.htm&date=2009/03/24/&prd=mp&[தொடர்பிழந்த இணைப்பு]
 5. 5.0 5.1 5.2 "Yahoo! Groups". Tech.groups.yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2011.
 6. "Qutb Shahi dynasty (Indian dynasty) - Britannica Online Encyclopedia". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2011.
 7. "How protected is our heritage?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 September 2011 இம் மூலத்தில் இருந்து 6 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121106121633/http://articles.timesofindia.indiatimes.com/2011-09-12/hyderabad/30144560_1_intach-qutub-shahi-heritage-list. பார்த்த நாள்: 12 September 2011. 
 8. 8.0 8.1 8.2 "Metro Plus Hyderabad / Columns : Naya Qila". தி இந்து. 12 December 2009. Archived from the original on 9 November 2012. பார்க்கப்பட்ட நாள் 29 May 2011.
 9. gigapan: search
 10. 10.0 10.1 10.2 Naya Quila, in Dire Straits ? The Baobabs: Pachycauls of Africa, Madagascar and Australia by Gerald E. Wickens. Springer Science+Business Media B.V. பக். 40,267,270. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-6430-2 இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108071208/http://www.scribd.com/doc/10522153/The-Baobabs. பார்த்த நாள்: 29 May 2011. 
 11. Naya Quila, in Dire Straits ? The Baobabs: Pachycauls of Africa, Madagascar and Australia by Gerald E. Wickens. Springer Science+Business Media B.V. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-6430-2 இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108071208/http://www.scribd.com/doc/10522153/The-Baobabs. பார்த்த நாள்: 29 May 2011. 
 12. "Naya Quila, in Dire Straits ?". Thenews.co.in. 30 December 2008. Archived from the original on 14 ஜூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 29 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 13. 13.0 13.1 "Andhra Pradesh / Hyderabad News : Outrage over golf at Naya Qila". தி இந்து. 22 February 2009. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 29 May 2011.
 14. "IASC 2011 - Sustaining Commons: Sustaining our Future". Iasc2011.fes.org.in. பார்க்கப்பட்ட நாள் 29 May 2011.
 15. Jul 28, TNN | Updated; 2010; Ist, 5:53. "105 acres of Golconda Fort goes to golf club | Hyderabad News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
 16. HyderabadMarch 6, A. Srinivasa Rao; March 6, 2012UPDATED; Ist, 2012 15:08. "Illegal golf course threatens Golconda fort in Hyderabad". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
 17. "The Qila-Turned-Golf Course in Hyderabad is Why We Must be Sceptical of 'Adopt a Heritage'". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.
 18. "Archaeological Survey of India has no clue on Golconda Fort limits". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2019-03-13. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நயா_கிலா&oldid=3677537" இலிருந்து மீள்விக்கப்பட்டது