உள்ளடக்கத்துக்குச் செல்

நயாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நயாத்
'ஜான் வில்லியம் வாட்டர்ஹவுஸ் வரைந்த 'நயாத்', 1893;
குழுபுராணக்கதை
உப குழுநீரில் வசிக்கும் ஆவி
இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினம்[1]
வாழ்விடம்நல்ல தண்ணீரில் வசிக்கும்

நயாத் ( Naiad ) என்பது கிரேக்க புராணங்களில் தோன்றும் ஒரு வகை பெண் ஆவியாகும். இது நீரூற்றுகள், கிணறுகள், அருவிகள், நீரோடைகள், மற்றும் பிற நன்னீர் பகுதிகளில் வசிப்பதாக நம்பப்படுகிறது. இவை ஆறுகளின் கடவுள்களிலிருந்து வேறுபட்டவைகள். இவைகள் ஆறுகளை உள்ளடக்கியவைகள். மேலும், மற்றும் சதுப்பு நிலங்கள், குளங்கள் மற்றும் ஆர்கோசிலுள்ள மைசீனியனுக்கு முந்தைய இலெர்னா போன்ற குளம்-ஏரிகளின் அமைதியான நீரில் வசிக்கும் பழமையான ஆவிகள்.

இவை பழங்காலத்தவர்களிடையே மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டன. மேலும் ஆடுகள், மது, தேன் மற்றும் எண்ணெய் ஆகியவை அவைகளுக்கு வழங்கப்பட்டன. சில சமயங்களில் பால், பழம் மற்றும் பூக்களை மட்டுமே பிரசாதமாக வைத்து வழிபட்டனர்.

சொற்பிறப்பியல்

[தொகு]

கிரேக்க மொழியில் நயாத் என்பதற்கு "ஓட்டம்", அல்லது "ஓடும் நீர்" எனப் பொருள் தருகிறது.

புராணம்

[தொகு]
நீர் அணங்கு ஆன்டைனின் தூக்கம் ஓவியம்

நயாத்துகள் பெரும்பாலும் பழமையான உள்ளூர் வழிபாட்டு முறைகளின் ஒரு பொருளாக இருந்தனன். அவை மனிதர்களால் இன்றியமையாததாக வழிபடப்படுகின்றன. வசந்தகால விழாக்களில் சிறுவர்களும் சிறுமிகளும் பெரியவர்களாக ஆகும்போது தங்கள் குழந்தைத்தனமான வேடிக்கைகளை உள்ளூர் நயாத்துக்கு அர்ப்பணித்தனர். லெர்னா போன்ற இடங்களில் அவர்களின் "நீர் சடங்கு" மந்திர மருத்துவ குணங்களைக் கொண்டது. அங்கு விலங்குகள் மூழ்கடிக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. அவர்களின் தெய்வ வாக்கு கேட்கும் இடமான ஆரக்கிள்கள் பண்டைய நீரூற்றுகளால் அமைந்திருக்கலாம்.

குறிப்பிட்ட நீரூற்றுகளுடன் தொடர்புடைய இவ்வகையான தண்ணீர் ஆவி கிரேக்கத்துடன் நேரடி தொடர்பு இல்லாத ஐரோப்பா முழுவதும் அறியப்பட்டது. வடமேற்கு ஐரோப்பாவின் கெல்ட்டியர்களின் கிணறுகளில் உயிர்வாழுவதாக நம்பபடுகிறது.

இடப் பெயர்கள்

[தொகு]

புகைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Scholiast on Homer, Odyssey 12.168 with Hesiod as the authority, translated by Evelyn-White
  2. Naiad Lake. SCAR Composite Gazetteer of Antarctica

குறிப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naiads
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயாத்&oldid=3884884" இலிருந்து மீள்விக்கப்பட்டது