நம்ம ஊரு செய்தி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நம்மஊருசெய்தி
Nammaoruseythi logo.jpg
வகைமாத இதழ்
ஆசிரியர்முனைவர் அ. அய்யூப்
நிறுவியது1994
மொழிதமிழ்
இணையத்தளம்www.nammaooruseythi.com

நம்மஊருசெய்தி இந்தியாவில் மயிலாடுதுறை நகரிலிருந்து 1994 முதல் வெளிவந்து கொண்டிருந்த மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

பெயர்[தொகு]

மயிலாடுதுறை நம்மஊருசெய்தி

சிறப்பம்சம்[தொகு]

இந்தியாவில் ஒரு சிற்றூரை மையமாகக் கொண்டு அந்த ஊரின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரத் தொடங்கிய முதல் மாத இதழாக மயிலாடுதுறை நம்மஊருசெய்தி கருதப்படுகிறது. நான்கு முதல் ஆறு பக்கங்கள் வரை தினசரி நாளிதழ் அளவில் மாதந்தோறும் வெளி வந்தது.

உள்ளூர் செய்திகளும், பேட்டிக் கட்டுரைகளும், விளம்பரங்களும் இதழில் வெளியாகின. உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த முனைவர் அ. ரபியுதீன் எழுதிய நினைத்தேன் எழுதுகிறேன் மற்றும் ஆசிரியர் முனைவர் அ. அய்யூப் தொடர்ந்து எழுதி வந்த ‘ஆசிரியர் பேசுகிறேன்’ என்ற பத்திகள் பெரும் வரவேற்பைப் பெற்று தனிப் நூற்களாகவும் வெளியாகின.

1994-ஆம் ஆண்டு கவிப் பேரரசு வைரமுத்து குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்த இந்த மாத இதழ் கடந்த 2010-ம் ஆண்டு வரை தொடர்ந்து வெளியாகியது. அதன் பிறகு நிர்வாகக் காரணங்களுக்காகத் ‘தற்காலிகமாக’ நிறுத்தி வைக்கப்படுகிறது என்னும் ஆசிரியர் குறிப்புடன் நிறுத்தப்பட்டது[1].

மயிலாடுதுறை நம்மஊருசெய்தியில் பணி புரிந்த பல செய்தியாளர்கள் தற்போது ஏனைய பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பணி புரிந்து வருகிறார்கள். மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் கோமல் அன்பரசன், நம்மஊருசெய்தி இதழில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]