நன்சாகூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன்சாகூ
Nunchaku
சங்கிலி இணைப்புடனான நன்சாகூ
வகைதற்காப்பு/தாக்குதல் ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடுஜப்பான்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது17ம் நூற்றாண்டு
பயன் படுத்தியவர்ஜப்பான், சீனா உட்பட்ட பல நாடுகள்

நன்சாகூ (ヌンチャク nunchaku) என்பது ஒரு பாரம்பரிய ஒக்கினோவா ஆயுதம். இரு தடிகளையும் சங்கிலி அல்லது கயிறு கொண்டு காணப்படும் இது தடிகளின் இரு முனைகளும் ஒன்றோடு ஒன்று குறுகிய சங்கிலி அல்லது கயிறு கொண்டு பிணைக்கப்பட்டிருக்கும். நவீன காலத்தில் நன்சாகூ புரூஸ் லீயின் திரைப்படங்கள் மூலம் பிரபல்யம் பெற்றது.

சொல்லிலக்கணம்[தொகு]

ஜப்பானிய துணைப் பகுதி மொழிகளில் ஒன்றாகிய ரியூக்யுவான் எனும் மொழியிலிருந்து நன்சாகூ எனும் சொல் உருவாகியது. இச்சொல்லின் ஆரம்பம் பற்றிய தெளிவற்ற நிலை காணப்படுகிறது. சீன மொழியின் தென் புஜியான் பேச்சுவழக்கிலிருந்து, தடி எனும் உச்சரிப்பிலிருந்து அச்சொல் உருவாகியிருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது.[1]

பகுதிகள்[தொகு]

நன்சாகூவின் பகுதிகள்
  • ஹிமோ (Himo)
நன்சாகூவின் இரு தடிகளை இணைக்கும் கயிறு
  • அனா (Ana)
தடியின் மேற்புறத்திலுள்ள, கயிறை இணைக்க உதவும் துளை
  • குசாரி (Kusari)
நன்சாகூவின் இரு தடிகளை இணைக்கும் சங்கிலி
  • கொண்டோ (Kontoh)
தடிகளின் மேற்புறம். இது சங்கிலிகளை இணைக்க உதவும்
  • யுகொன்-வூ (Jukon-bu)
தடியின் மேற்பகுதி
  • சுகொன்-வூ (Chukon-bu)
தடியின் மத்திய பகுதி
  • கிகொன்-வூ (Kikon-bu)
தடியின் கீழ்ப்பகுதி
  • கொன்டேய் (Kontei)
தடியின் கீழ்ப்புறம்[2]

குறிப்புக்கள்[தொகு]

  1. "ヌンチャクについて" (in Japanese). Budoshop Japan. Archived from the original on 2016-11-15. பார்க்கப்பட்ட நாள் 2012-01-15. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  2. Nunchaku: karate weapon of self-defense, Fumio Demura, Black Belt Communications, 1971 p.13

வெளியிணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nunchaku
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


தகவல் மற்றும் நுட்பம்[தொகு]

பன்னாட்டு சங்கங்கள்[தொகு]

சட்ட விடயங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்சாகூ&oldid=3577618" இலிருந்து மீள்விக்கப்பட்டது