உள்ளடக்கத்துக்குச் செல்

நதீம் காசிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நதீம் காசிசு (Nadeem Kashish ஒரு பாக்கித்தான் திருநங்கை ஆர்வலர், அரசியல்வாதி மற்றும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். [1] 2018 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நான்கு திருநங்கைகளில் ஒருவராக இருந்தார். [2] [3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

காசிசு, இவரது பெண் நடத்தை காரணமாக 16 ஆம் வயதில் இவரது குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டார் [4] மற்றும் முல்தானில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். காசிசு பின்னர் குருக்களின் வீட்டில் சேர்ந்தார்,[சான்று தேவை] பாக்கித்தானில் பொதுவாக திருநங்கைகள் வாழும் சமூகம். குரு; வீட்டின் தலைவர், வீட்டில் வசிப்பவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவார். இருப்பினும், குருவினால் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வற்புறுத்தப்பட்டதால் இவனுடனான உறவை துண்டித்துக்கொண்டு காசிஷ் வீட்டை விட்டு வெளியேறினார். திருநங்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் இவ்வகையான இடங்கள் பெரும்பாலும் இவர்களை கட்டாய விபசாரங்களில் ஈடுபட நிர்பந்திக்கிறது.காசிசு, பின்னர் இஸ்லாமாபாத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒப்பனை கலைஞராக சேர்ந்தார். அங்கிருந்து இவர் திருநங்கைகளுக்கு உதவும் அரசு சார்பற்ற அமைப்புக்காக வேலை செய்யத் தொடங்கினார். [5] காசிசு பாக்கித்தானின் இஸ்லாமாபாத்தில் தற்போது வசிக்கிறார்.

தொழில்

[தொகு]

2006 இல், காசிசு ஒப்பனை கலைஞராக வேலை செய்தார். பின்னர் இவர் FM-99 இல் ஒரு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்தார், அங்கு இவர் பாக்கித்தானில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி எடுத்துரைத்தார். [6]

இவர் ஒரு ஆர்வலராக வேலை செய்யத் தொடங்கினார் மற்றும் தனது சொந்த நிறுவனமான "சீமேல் அசோசியேஷன் ஃபார் ஃபண்டமெண்டல் ரைட்ஸ்(சஃபார்) என்பதனை நிறுவினார் [7][8] இவர் அந்த அரசு சாரா அமைப்பின் தலைவராக தற்போது உள்ளார். [9]

2018 இல், காசிசு தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்ட போது அரசியலில் சேர்ந்தார். [10]

சமூக செயற்பாடு

[தொகு]

காசிசு வீடு வீடாக பிரச்சாரம் செய்தார். [7] திருநங்கைகளின் சமூகத்தை மேம்படுத்துவதும், இவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும் தான் இவரது குறிக்கோள் என பரப்புரையின் போது இவர் மக்களிடம் கூறினார். [7] சமூகத்தில் பல திருநங்கைகள் வசிக்கும் இஸ்லாமாபாத்தில் இவர் தனது சொந்த திருநங்கை தங்குமிடத்தையும் உருவாக்கினார். [11]

காசிசு திருநங்கை சமூகத்தில் குரு கலாச்சாரத்திற்கு எதிராக வாதிடுகிறார். [12]

இஸ்லாமாபாத்தில் சேரிகளில் வசிக்கும் திருநங்கைகளுக்கு மசூதி கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக காசிசு இருந்தார். [13]

2018 தேர்தல்

[தொகு]

2018 ஆம் ஆண்டில், பாக்கித்தான் அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றியது, அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் திருநங்கைகள் தங்கள் பாலினத்தை தீர்மானிக்கவும், அடையாள அட்டை கடவுச் சீட்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறவும், [14] [15] வாக்களிக்க மற்றும் வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டக்கூடாது ஆகியன அதில் முக்கிய அம்சங்களாக இருந்தது. [16] [17] இது பாலின அளவுகோல்களை நீக்கியது மற்றும் நதீம் காசிசு மற்றும் பிற நான்கு மாற்றுத்திறனாளிகள் பொதுத் தேர்தல்களில் பங்கேற்கும் முதல் திருநங்கை ஆனார்கள். [18]

காசிசு மற்றும் பிற திருநங்கைகள் வேட்பாளர்களுடன் பாக்கித்தான் அரசால் தேர்தல் கட்டணத்திலிருந்து விலக்கு பெற்றனர். [19] காசிசு இஸ்லாமாபாத்தில் NA-53 க்கான தொகுதியில் சாகித் ககன் அப்பாசி மற்றும் PTI இன் இம்ரான் கான் ஆகியோரை எதிர்த்து நின்றார். அந்தத் தேர்தலில் இவர் மொத்தம் 22 வாக்குகளைப் பெற்றார். [20] [21]

பிரச்சாரத்தின் போது, காசிஷ் திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கான நீரைப் பாதுகாப்பதற்கான அவசியம் பற்றி பரப்புரையின் போது எடுத்துரைத்தார். [22]

சான்றுகள்

[தொகு]
  1. "Transgender community of Pakistan launches political party seeking equal rights". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  2. "Pakistan Elections 2018: Transgender acid attack survivor, Nayyab Ali, running for Parliament, cast her vote". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  3. "Pakistan rights group issues warning ahead of polls". AP NEWS. 16 July 2018. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  4. "Pakistan's Transgender Candidates Step Onto Political Stage". Time. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  5. "Transgender campaigns for acceptance in Pakistan election". www.efe.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  6. "Pakistan's first transgender radio host". Pakistan Saga (in அமெரிக்க ஆங்கிலம்). 10 December 2018. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  7. 7.0 7.1 7.2 Malik, Shiza (25 June 2018). "'Only with participation of transgender people will democracy be complete,' says Nadeem Kashish". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.Malik, Shiza (25 June 2018). "'Only with participation of transgender people will democracy be complete,' says Nadeem Kashish". DAWN.COM. Retrieved 10 November 2020.
  8. "Transgenders feel left out of Covid-19 aid conversation". The Express Tribune (in ஆங்கிலம்). 9 April 2020. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  9. "Call for engaging 'Gurus' to develop transgender database | Pakistan Today". www.pakistantoday.com.pk. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  10. "Transgender participation in Pakistan's elections - Rights - Women talk online - DW.COM". Women Talk Online – A forum for women to talk to women (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  11. "Virus pushes Pakistan's transgender dancers out of their homes". https://www.bangkokpost.com/world/1921972/virus-pushes-pakistans-transgender-dancers-out-of-their-homes. 
  12. "Pakistan transgender leader calls for end to culture of 'gurus'". the Guardian (in ஆங்கிலம்). 25 December 2016. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
  13. "Mosque not just for transgenders, says Kashish". The Nation (in ஆங்கிலம்). 24 November 2016. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
  14. "Pakistan's Transgender Activists Look Ahead to Elections". Time. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  15. seattle times (19 August 2017). "Transgender Pakistanis".
  16. "Transgender campaigns for acceptance in Pakistan election". The Daily Star (in ஆங்கிலம்). 21 July 2018. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  17. Guramani, Nadir (7 March 2018). "Senate unanimously approves bill empowering transgenders to determine their own identity". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  18. "Hoping against hope, Pakistan's transgenders launch election fight". The Express Tribune (in ஆங்கிலம்). 9 July 2018. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  19. "Trans elections | Dialogue | thenews.com.pk". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  20. "Victory for the third gender | Dialogue | thenews.com.pk". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  21. "General Elections 2018: 'Kashish' set to challenge PTI Chairman and former premier – Pakistan". Dunya News. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  22. "Hoping against hope, Pakistan's transgenders launch election fight". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதீம்_காசிசு&oldid=3781013" இலிருந்து மீள்விக்கப்பட்டது