நடைமுறைவாதம்
Jump to navigation
Jump to search
நடைமுறைவாதம், பயனீட்டுவாதம் அல்லது காரியவாதம் (Pragmatism) என்பது ஒரு மெய்யியல் கருத்துரு ஆகும். நடைமுறை விளைவுகளைக் கருத்தில் கொள்வதன் மூலமே ஒரு செயற்பாடு அல்லது பொருளின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நடைமுறைவாதம் முதன்மையாக எடுத்துரைக்கிறது. அதாவது விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் நுட்பம், நிலைப்பாடு அல்லது ஏற்பாடுகள் சிறந்தவை என்கிறது. இந்தக் கோட்பாடு அமெரிக்கர்களான சார்ல்ஸ் சாண்டர்ஸ் பியேர்ஸ், வில்லியம் ஜேம்ஸ், ஜோன் டூவி ஆகியோரால் வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
எல்லா விடயங்களிலும் முன்கூட்டியே அறிந்து நிலைப்பாடுகளை எடுக்க முடியாது என்பது இந்த வாதத்தின் ஒரு முக்கிய கூறு. காரியவாதம் அடிப்படைவாதத்துக்கு முற்றிலும் எதிரான ஒரு நிலைப்பாடு எனலாம். பகுத்தறிவுவாதத்தையும் இது கேள்விக்கு உட்படுத்துகிறது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Pragmatism's Three Moments Louis Menand