உள்ளடக்கத்துக்குச் செல்

நடுப்புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(x1, y1), (x2, y2) புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி

வடிவவியலில், நடுப்புள்ளி அல்லது மையப்புள்ளி(midpoint) என்பது ஒரு கோட்டுத்துண்டின் நடுவில் அமையும் புள்ளியாகும். இப்புள்ளி கோட்டுத்துண்டின் இரு முனைப்புள்ளிகளிலிருந்தும் சம தூரத்தில் அமையும்.

வாய்ப்பாடு

[தொகு]

ஒரு தளத்தில், (x1) மற்றும் (x2) என்ற இரு முனைப்புள்ளிகளைக் கொண்ட கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி காணும் வாய்ப்பாடு:

ஒரு தளத்தில் (x1, y1) and (x2, y2)என்ற இரு முனைப்புள்ளிகளைக் கொண்ட கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி காணும் வாய்ப்பாடு:

ஒரு வெளீயில்(x1, y1, z1) and (x2, y2 z2) என்ற இரு முனைப்புள்ளிகளைக் கொண்ட கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி காணும் வாய்ப்பாடு:

பொதுவாக, அச்சுகளுடைய n-பரிமாண வெளியில், ஒரு இடைவெளியின் நடுப்புள்ளி:

வரைதல்

[தொகு]

ஒரு கோட்டுத்துண்டின் நடுப்புள்ளிகாண:

  • அக்கோட்டுத்துண்டின் இரு முனைகளிலிருந்தும் சமஆரமுள்ள வட்ட விற்கள் வரைந்து குவிவு வில்லை(lens) ஒன்றை வரைய வேண்டும்.
  • பின் அவ்வில்லையின் முனைகளை இணைத்து ஒரு கோடு வரைதல் வேண்டும்.
  • அக்கோடானது, தரப்பட்ட கோட்டுத்துண்டை சந்திக்கும் புள்ளி கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி ஆகும்.

கவராயத்தை மட்டும் பயன்படுத்தி நடுப்புள்ளியைக் கண்டுபிடிப்பது சவாலானது என்றாலும் செய்வது இயலும்.[1]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Wolfram mathworld". 29 September 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Animation - showing the characteristics of the midpoint of a line segment


"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுப்புள்ளி&oldid=2744975" இலிருந்து மீள்விக்கப்பட்டது