நடால்யா வாசுகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடால்யா வாசுகோ
Natalya Vasko
பிறப்புநடால்யா லுபோமிரிவ்னா வாசுகோ
19 அக்டோபர் 1972 (1972-10-19) (அகவை 51)
செர்வோனோக்ராத்து, உக்ரைனிய சோவியத் சோசலிச குடியரசு, சோவியத் ஒன்றியம்
குடியுரிமைஉக்ரைன்
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
ஆண்டரி செசுடோவ்
பிள்ளைகள்1

நடால்யா லுபோமிரிவ்னா வாசுகோ (Natalya Vasko) உக்ரைனிய நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகையாவார். ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் இவர் பணிபுரிந்தார். 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியன்று எல்விவ் மாகாணத்தில் உள்ள செர்வோனோக்ராத்து நகரத்தில் இவர் பிறந்தார். உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள தேசிய கல்வியியல் இளையோர் நாடகக் குழுவில் முன்னணி நடிகையாக இருந்தார். தி நெசுட்டு ஆஃப் தி டர்டில்டோவ் (2017) என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக "சிறந்த துணை நடிகை" பிரிவில் கோல்டன் டிசிக்கா விருதை வென்றார்.[1] நடால்யா லுபோமிரிவ்னா வாசுகோ உக்ரைனிய திரைப்பட அகாடமியின் உறுப்பினராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "«Золота Дзиґа»: оголошено переможців першого українського Оскара" (in உக்ரைனியன்). Maximum.fm кіноакадемії. 21 April 2017. Archived from the original on 23 February 2022. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடால்யா_வாசுகோ&oldid=3811783" இலிருந்து மீள்விக்கப்பட்டது