நச்சுநிரல் தடுப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நச்சுநிரல்தடுப்பி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆண்டிவரைஸ் (இலங்கை வழக்கு: அன்ரிவைரஸ்) பொதுவாக அறியப்படும் நச்சுநிரல் தடுப்பி (வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்) கணினி நச்சுநிரல் (கணினி வைரஸ்) மற்றும் ஏனைய கெட்ட மென்பொருட்களைக் கண்டறிந்து அகற்றும் மென்பொருளாகும்.

நச்சுநிரல்தடுப்பிகள் பொதுவாக இரண்டு முக்கியமான நடைமுறைகளைக் கையாள்கின்றன.

  • கோப்புக்களை அலசி ஆராய்ந்து அதை நச்சுநிரல் அகராதியுடன் ஒப்பிட்டு ஏதேனும் பொருத்தமுள்ளதா என்பதைக் கண்டுபிடித்தல்
  • மென்பொருள் அல்லது நிரலொன்றின் நடத்தைகளை அவதானித்து சந்தேகத்திற்கிடமான மென்பொருள் அல்லது நிரல்களைக் கண்டுபிடித்தல்.

பெரும்பாலான நச்சுநிரல்தடுப்பிகள இன்று இவ்விரண்டு யுக்திகளையும் கையாள்கின்றன.

வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களைச் பரிசோதித்தல்[தொகு]

வைரஸ் இனம் காணல்

நீங்கள் எந்தவொரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பாவித்தாலும் அதனைக் காலத்திற்குக் காலம் மேம்படுத்தி உண்மையிலேயே கணினி நச்சுநிரல்களைக் கண்டுபிடிக்கின்றதா என்பதையும் பரீட்சித்தல் வேண்டும். இவ்வாறு பரீட்சிப்பதற்கு ஐரோப்பிய கணினி வைரஸ் ஆய்வுகூடம் ஒர் ஐகார் சோதனை வைரஸ் கோப்பு பரணிடப்பட்டது 2006-03-22 at the வந்தவழி இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர் இத்தளத்தைப் பார்வையிட்டு இதனைப் ஐகார் சோதனை நச்சுநிரல் ஐப் பதிவிறக்கம் செய்யமுயலவும். முடிந்தால் உங்கள் பாதுகாப்புச் சுவரானது அநேகமாக வேலைசெய்யவில்லை அல்லது உங்கள் பாதுகாப்புச் சுவரில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் இல்லை அல்லது உங்கள் நச்சுநிரல்தடுப்பியிடம் நிகழ்நிலைப் பாதுகாப்பு இல்லை. பதிவிறக்கம் செய்திருந்தால் அதனை உங்களிடம் உள்ள நச்சுநிரல்தடுப்பி கொண்டு பரீட்சிக்கவும். இப்போதும் அதனைக் கண்டுபிடிக்கவில்லை எனில் உங்கள் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் வேலை செய்யவில்லை. இவ்வாறெனின் அந்த வைரஸ் எதிர்ப்பு நிரலை அகற்றிவிட்டுப் பிறிதோர் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிக் கொள்ளவும். அல்லது கணினியில் கோப்புக்களைப் பாதுகாப்பான ஓரிடத்திற் சேமித்துவிட்டு இயங்குதளத்தையும் நச்சுநிரல்தடுப்பியையும் மீள நிறுவிக்கொள்ளவும்.

ஒன்றிற்கு மேற்பட்ட நச்சுநிரற்தடுப்பி்[தொகு]

ஓர் கணினியில் ஒன்றிற்கு மேற்பட்ட நச்சுநிரற்தடுப்பிகளை நிறுவவேண்டாம் இதனால் இரட்டைப் பாதுகாப்பு எதுவும் கிடையாது மாறாக கணினியின் வேகம் வெகுவாகக் குறைவடையும். அநேகமாக மக் அபீ நோர்ட்டன் பொன்றவை நிறுவாது எனினும் வேறுசில நச்சிநிரற்தடுப்பிகளை நிறுவக் கூடியதாகவுள்ளது. சிலசமயங்களில் இவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்டட வைரஸ் எதிர்ப்பு நிரல்கள் நிறுவப்பட்ட கணினியில் வேகக் குறைவினால் கணினியின் இயங்குதளத்தை மீள் நிறுவவேண்டியும் ஏற்படலாம்.

வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள்[தொகு]

நீங்கள் எந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பாவித்தாலும் அதைக் காலத்திற்குக் காலம் மேம்படுத்தி வரவேண்டும் அத்துடன் கிழமைக்கு ஒரு தரமேனும் உங்கள் கணினி நச்சுநிரல்கள் அற்றது என்பதை உறுதிசெய்ய Scan செய்து வரவும்

இலவசமாகக் கிடைப்பவை[தொகு]

வர்த்தக ரீதியானவை[தொகு]

சரித்திரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நச்சுநிரல்_தடுப்பி&oldid=3588511" இலிருந்து மீள்விக்கப்பட்டது