பினாங்கு நகர விளையாட்டரங்கம்
Penang City Stadium Stadium Bandaraya Pulau Pinang | |
முன்னாள் பெயர்கள் | பினாங்கு தீவு தேசிய விளையாட்டரங்கம் (1 அக்டோபர் 1945–8 ஆகஸ்டு 2003) |
---|---|
அமைவிடம் | ஜார்ஜ் டவுன், பினாங்கு |
ஆட்கூற்றுகள் | 5°24′42″N 100°18′52″E / 5.4117°N 100.3145°E |
உரிமையாளர் | பினாங்கு மாநில அரசு |
இயக்குநர் | பினாங்கு தீவு மாநகராட்சி |
இருக்கை எண்ணிக்கை | 20,000[1] |
ஆடுகள அளவு | 110 m × 70 m (120 yd × 77 yd) |
தரைப் பரப்பு | புல்வெளி தடகளம் |
கட்டுமானம் | |
Broke ground | 1 அக்டோபர் 1945 |
கட்டப்பட்டது | ஜூன் 1, 1948 |
திறக்கப்பட்டது | செப்டம்பர் 1, 1956 |
சீரமைக்கப்பட்டது | 1953, 2018 |
விரிவாக்கப்பட்டது | 1 மே 1950 |
வடிவமைப்பாளர் | ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் |
குடியிருப்போர் | |
பினாங்கு எப் சி |
பினாங்கு நகர விளையாட்டரங்கம் ஆங்கிலம்: Penang City Stadium; மலாய்: Stadium Bandaraya Pulau Pinang) என்பது மலேசியா, பினாங்கு ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு பல்நோக்கு மைதானமாகும். மேலும் இது பினாங்கு மாநில கால்பந்து அணியான பினாங்கு எப் சி-க்குச் சொந்த மைதானமாக செயல்படுகிறது.
மலேசியாவில் பயன்பாட்டில் உள்ள பழைமையான விளையாட்டு அரங்கங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அரங்கம் 1932-இல் பிரித்தானிய அரசாங்கத்தால் கட்டப்பட்டது[2].
சுமார் 25,000 பேர் அமரக்கூடிய திறன் கொண்ட இந்த அரங்கம் தற்போது கால்பந்து போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது
வரலாறு
[தொகு]பினாங்கு தீவு தேசிய விளையாட்டரங்கம்
[தொகு]விளையாட்டரங்கத்தின் கட்டுமானம் 1 அக்டோபர் 1945 அன்று இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் தொடங்கியது. 1948-இல் முடிந்ததும், அதிகாரப்பூர்வமாக பினாங்கு தீவு தேசிய விளையாட்டரங்கம் என பெயரைப் பெற்றது.
1950-ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்தால் இந்த மைதானம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் 1953 ஆம் ஆண்டு மேலும் புதுப்பிக்கப்பட்டது.
நகர விளையாட்டரங்கம்
[தொகு]பினாங்கு தீவு தேசிய விளையாட்டரங்கம் 2003-இல் நகர விளையாட்டரங்கம் என மறுபெயரிடப்பட்டது. 2000-களில் மற்றொரு சுற்று சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malaysia – Penang FA Venue– Soccerway". Soccerway. பார்க்கப்பட்ட நாள் 6 March 2021.
- ↑ "Bandaraya Stadium event". Archived from the original on 2018-02-03. பார்க்கப்பட்ட நாள் 2023-02-18.