உள்ளடக்கத்துக்குச் செல்

த டைம்சு ஒஃப் சிலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த டைம்சு ஒஃப் சிலோன்
The Times of Ceylon
வகைசெய்தி நாளிதழ்
உரிமையாளர்(கள்)டைம்சு ஒஃப் சிலோன் லிமிட்டெட்
நிறுவியதுசூலை 11, 1846 (1846-07-11)
மொழிஆங்கிலம்
வெளியீட்டு முடிவு1985
சகோதர செய்தித்தாள்கள்
  • சிலோன் டெய்லி மிரர்
  • லங்காதீப
  • மோர்னிங் டைம்சு
  • தமிழ் மிரர்
  • சிறீ லங்காதீப
  • சண்டே மிரர்
  • சண்டே டைம்சு ஒஃப் சிலோன்
  • வனிதா வித்தி
OCLC எண்1781454
நாடுஇலங்கை
நகரம்கொழும்பு

த டைம்சு ஒஃப் சிலோன் (The Times of Ceylon) என்பது இலங்கையில் கொழும்பு நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஓர் ஆங்கிலச் செய்திப் பத்திரிகை ஆகும். இது முதன் முதலில் 1846-ஆம் ஆண்டில் சிலோன் டைம்சு என்ற பெயரில் வெளிவந்தது. இதன் வெளியீடு 1985 இல் நிறுத்தப்பட்டது.

வரலாறு

[தொகு]
ஜோன் கேப்பர்

சிலோன் டைம்சு செய்தி இதழ் 1846 சூலை 11 இல் செயலிழந்த த சிலோன் கெரால்டு அச்சகத்தில் வில்சன், ரிச்சி நிறுவனத்தினரால் தொடங்கப்பட்டது.[1][2] தி ஒப்சர்வர் பத்திரிகைக்குப் போட்டியாகவும், பிரித்தானியக் குடியேற்றங்களின் வணிக நலன்களை மேம்படுத்துவதற்காகவும் இந்த செய்தித்தாள் தொடங்கப்பட்டது.[3] தொடக்கத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இது வெளியிடப்பட்டது.[3][4]

1858 இல் இப்பத்திரிகை நிறுவனத்தை யை இலண்டனின் த குளோப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஜோன் கேப்பர் விலைக்கு வாங்கினார்.[3][4] கேப்பர் 1874-ஆம் ஆண்டில், அலெக்சாண்டர் அலார்டைசுக்கு விற்றுவிட்டு[5] பிரித்தானியா திரும்பினார்.[6] புதிய உரிமையாளர்களின் கீழ் பத்திரிகையின் முக்கியத்துவம் குறைந்து, அது கலைக்கப்பட்டது. கேப்பர் மீண்டும் இலங்கை திரும்பி, அப்புத்தளையைச் சேர்ந்த காப்பித் தோட்ட உரிமையாளரான அவரது மகன் பிராங்க் ஏ. கேப்பரின் உதவியுடன், 1882 ஆம் ஆண்டில் பத்திரிகையை மீண்டும் வாங்கி தி டைம்ஸ் ஒஃப் சிலோன் என்ற பெயரில் வெளியிட்டார்.[4][6] கேப்பரின் மூத்த மகன் எர்பர்ட் எச். கேப்பரும் இந்த பத்திரிகையுடன் இணைந்தார்.[4][6] இந்த செய்திப்பத்திரிகை மீண்டும் வளரத்தொடங்கியது, பெருந்தோட்ட உரிமையாளர்களாலும் ஐரோப்பியக் குடியிருப்பாளர்களாலும் படிக்கப்படும் முன்னணிச் செய்தித்தாள் ஆனது.[4] இவ்விதழ் 1883 இல் மாலை இதழாக வெளியிடப்பட்டது.[7] ஜோன் கேப்பர் பத்திரிகையின் நிர்வாகத்தை அவரது இரண்டு மகன்களிடம் விட்டுவிட்டு, 1884-இல் இலங்கையில் இருந்து வெளியேறினார்.[4] 1903-இல், ஆறுமுகம் சங்கரப்பிள்ளை என்பவர் இப்பத்திரிகையின் தனி உரிமையாளராக ஆனார், பின்னர் அவரது மகன் நிர்வாக இயக்குநரானார்.[8]

டைம்சு நிறுவனமும் அதன் போட்டியாளரான அசோசியேட்டட் நியூசுபேப்பர்சு ஒஃப் சிலோன் (ANCL) ஆகியவை 1948-இல் பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றபோது செய்தித்தாள் துறையில் ஆதிக்கம் செலுத்தின.[9] அசோசியேட்டட் நியூசுபேப்பர்சு நிறுவனம் சூலை 1973 இலும், டைம்சு நிறுவனம் ஆகத்து 1977 இலும் இலங்கை அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்டன.[9] பின்னர் டைம்சு நிறுவனம் நிதி மற்றும் தொழிலாளர் பிரச்சனைகளை எதிர்கொண்டதை அடுத்து, 1985 சனவரி 31 அன்று இப்பத்திரிகையும் அதன் பல்வேறு வெளியீடுகளும் மூடப்பட்டன.[9] தேசியமயமாக்கலுக்கு முன் அசோசியேட்டட் நியூசுபேப்பர்சு நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன, டைம்சு வெளியீடுகளின் வர்த்தகப் பெயர்களையும், நூலகத்தையும் வாங்கினார்.[9] விஜேவர்தனாவின் நிறுவனமான விஜயா நியூசுபேப்பர்சு, முன்னாள் டைம்சு வெளியீடுகளின் பெயர்களைப் பயன்படுத்தி பல்வேறு செய்தித்தாள்களைத் தொடங்கியது.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Periodicals and Newspapers in Ceylon". Journal of the Dutch Burgher Union of Ceylon XXXI (4): 137–152. April 1942. http://www.dutchburgherunion.org/journals/vol_31_40/JDBU%20Vol%2031%20No%203%20-%201942(1).pdf. 
  2. Martyn, John H. (1923). Notes on Jaffna - Chronological, Historical, Biographical. தெல்லிப்பழை: அமெரிக்க இலங்கை மறைப்பணி Press. pp. 205–206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1670-7.
  3. 3.0 3.1 3.2 "Ceylon Times' begins publication". The Sunday Times. 9 July 2006. http://www.sundaytimes.lk/060709/funday/OurHeritage.html. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Beven, Francis. "The Press". In Wright, Arnold (ed.). Twentieth Century Impressions of Ceylon. ஏஷியன் எஜுகேஷனல் சேர்விசஸ். pp. 301–319.
  5. Twentieth century impressions of Ceylon : its history, people, commerce, industries, and resources. Wright, Arnold, 1858-1941. New Delhi: Asian Educational Services. 1999. pp. 504–505. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120613355. இணையக் கணினி நூலக மைய எண் 41143358.{{cite book}}: CS1 maint: others (link)
  6. 6.0 6.1 6.2 "Planter who became Chairman of The Times". The Sunday Times. 30 March 1997. http://www.sundaytimes.lk/970330/plusm.html#Planter. 
  7. "Another Sinhala newspaper launched". The Sunday Times. 10 August 2008. http://www.sundaytimes.lk/080810/FunDay/fundaytimes_2.html. 
  8. Arumugam, S., ed. (January 1997). A Dictionary of Biography of Ceylon Tamils (PDF).
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 Karunanayake, Nandana (2008). "18: Sri Lanka". In Banerjee, Indrajit; Logan, Stephen (eds.). Asian Communication Handbook 2008. Singapore: ஆசிய ஊடகத் தகவல் மற்றும் தொடர்பு மையம், Wee Kim Wee School of Communication and Information, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். pp. 446–460. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789814136105.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_டைம்சு_ஒஃப்_சிலோன்&oldid=3820927" இலிருந்து மீள்விக்கப்பட்டது