ஆசிய ஊடகத் தகவல் மற்றும் தொடர்பு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய ஊடகத் தகவல் மற்றும் தொடர்பு மையம் (Asian Media Information and Communication Centre) சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தொண்டு நிறுவனமாகும். ஆசியாவில் ஊடகங்கள் மற்றும் தகவல்தொடர்புகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக செருமன் நாட்டைச் சேர்ந்த பிரடெரிக்-எபர்ட்டு-சிடிப்டங்கு அடித்தள அறக்கட்டளை அமைப்பு இம்மையத்திற்கு நிதியுதவி செய்கிறது. முன்னதாக ஆசிய மக்கள் தொடர்பு ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளுக்கு மேலதிகமாக, இந்நிறுவனம் ஆசிய மக்கள் தொடர்பு செய்தி இதழ் மற்றும் ஆசிய தகவல் தொடர்பு செய்தி இதழ் உள்ளிட்ட பத்திரிகைகளை வெளியிடுகிறது. [1]

இலாப நோக்கமற்ற ஒரு தொண்டு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்ட இந்நிறுவனம் சமூக-கலாச்சார ரீதியாக வேறுபட்ட பிராந்தியத்தில் சுதந்திரம் மற்றும் மக்களாட்சி கொள்கைகளுக்கு உறுதியளிக்கும் சமூக பொறுப்புள்ள தகவல் தொடர்பு ஊடகத் துறையை ஊக்குவிக்கிறது.

தகவல்தொடர்பு ஊடக கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை மேம்பாட்டுக்காக ஆசியாவை மையமாகக் கொண்டு இம்மையம் செயல்படுகிறது. ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்குள்ளும் வெளியேயும் தகவல் தொடர்பு ஊடகங்களில் கற்றல் வளங்களை மேம்படுத்துதல், பகிர்தல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கான தளத்தை வழங்கவும் முயல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lent, John A. (1975). "Asian mass communications: Selected information sources". Journal of Broadcasting 19: 321–340. doi:10.1080/08838157509363794. 

புற இணைப்புகள்[தொகு]