த. சீனிவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மபுரி சினிவாஸ்
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்கவை உறுப்பினர் தெலுங்கானா
பதவியில் உள்ளார்
பதவியில்
22 ஜூன் 2016
முன்னையவர்வி.அனுமந்த ராவ், INC
தொகுதிநிஜாமாபாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 செப்டம்பர் 1948 (1948-09-27) (அகவை 75)
வேல்பூர் நிஜாமாபாத் மாவட்டம் தெலுங்கானா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ்
பிள்ளைகள்சஞ்சய், அர்விந்த்
வாழிடம்(s)நிஜாமாபாத்,,ஹைதராபாத் சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு

தர்மபுரி சீனிவாஸ் (பிறப்பு: செப்டம்பர் 27, 1948) ஓர் இந்திய அரசியல்வாதி. ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும் [1] மற்றும் சட்டமன்ற உறுப்பினராக 1989,1999, மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ல் ராஜசேகர் ரெட்டியின் அரசாங்கத்தில் உயர் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சராக பணியாற்றினார். சீனிவாஸ் ஆந்திர மாநில அமைச்சரவையில் வெவ்வேறு இலாகாக்களிலும் பணியாற்றினார். 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் கொண்டுவருவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இவர் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சர் அர்குல் ராஜாராமின் மருமகன் ஆவார். இவர் 2009 மற்றும் 2012 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவிடம் மற்றும் 2014 சட்டமன்ற தேர்தலில் டிஆர்எஸ் கட்சியிடம் தோல்வியடைந்தார்.

இவர் ஜூலை 2, 2015 அன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

டி.சீனிவாஸ் நிஜாமாபாத்தில் பிறந்தார். ஹைதராபாத்தின் நிஜாம் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

டி.சீனிவாஸ்க்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் சஞ்சய் நிஜாமாபாத்தின் முன்னாள் மேயராக இருந்துள்ளார். இவரது இளைய மகன் அரவிந்த் ஓர் தொழிலதிபர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் .

மேலும் காண்க[தொகு]

  • அரவிந்த் தர்மபுரி

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._சீனிவாஸ்&oldid=3214861" இலிருந்து மீள்விக்கப்பட்டது