தோட்டியின் மகன் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தோட்டியின் மகன்(புதினம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தோட்டியின் மகன்
நூல் பெயர்:தோட்டியின் மகன்
ஆசிரியர்(கள்):மலையாளதில் தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில் சுந்தர ராமசாமி
வகை:மொழிபெயர்ப்பு இலக்கியம்
துறை:{{{பொருள்}}}
காலம்:ஆகஸ்ட் 2000
இடம்:தமிழ் நாடு
மொழி:தமிழ்
பதிப்பகர்:காலச்சுவடு பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு : ஆகஸ்டு 2000; இரண்டாம் பதிப்பு : செப்டம்பர் 2001 பக்கங்கள் = 175
ஆக்க அனுமதி:பி.கமலாட்சி அம்மா

'தோட்டியின் மகன்' எனும் நாவல் மலையாளத்தில் 1946 களில் தகழி சிவசங்கரப்பிள்ளையால் எழுதப்பட்ட 'தோட்டியின் மக' எனும் நாவலின் மொழிபெயர்ப்பாகும்.இதனை தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ளார்.1957 களில் சரஸ்வதி இதழில் மொழிபெயர்ப்பு தொடர்கதையாக வெளியிடப்பட்டபொழுதும், 2000ம் ஆண்டில்களில்தான் இக் கதை நாவலுரு பெற்றது. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூல் தமிழ்நாடு அரசின் சிறந்த மொழியாக்க நூல்களை வெளியிட நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றது.

ஆழப்புழை நகரசபையில் மலமள்ளும் தொழிலினை செய்துவருகின்ற தோட்டிகளின் வாழ்க்கையினை பற்றியும் அவர்களின் உணர்வுகள்,வெளிப்பாடுகள் போன்றவற்றினை மையமாகக் கொண்டு இந் நாவல் எழுதப்பட்டுள்ளது.

மலையாளத்தில் தோட்டியின் மகன் வெளிவந்த காலத்திலிருந்து தொடந்து பேசப்பட்டுவரும் நாவல். மேடையிலும் எழுத்திலும்.

திருநெல்வேலிச் சீமையிலிருந்து மாடுகள் போல் பிடித்துக் கொண்டு போகப்பட்ட இந்தத் தோட்டிகள் தலித் வாழ்க்கையின் அவலத்தை நம் மனதில் ஆழமாகப் பதியவைக்கின்றனர்.

இந்நூல் பற்றி[தொகு]

தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகனை (1947) மொழிபெயர்த்தபோது (1951, 52)சுந்தர ராமசாமி அவர்களுக்கு வயது இருபது , இருபத்தியொன்று மட்டுமே. இவரது தோட்டியின் மகன் மொழிபெயர்ப்பை முதலில் படித்துப் பார்த்து ஊக்குவித்தவர் அவரது நண்பர் தொ.மு.சி.ரகுநாதன்.இந்நூலை தொடர்கதையாக சரஸ்வதியில் வெளியிட்டவர் அவரது நண்பர் வ.விஜய பாஸ்கரன். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நூலாக்கம் செய்ய முயன்ற போது சரஸ்வதி தொகுப்பைத் தந்து உதவியவர் அவரது நண்பர் கர்ணன்.

சரஸ்வதி இதழில் சுந்தர ராமசாமி அவர்கள் பெயரில் ஏற்கனவே சிறுகதைகள் வந்து கொண்டிருந்ததால், என்.எஸ்.ஆர் என்ற பெயரில் தோட்டியின் மகன் தொடர்கதையாக வெளியாயிற்று மார்ச் 57 இலிருந்து ஜூன் 58 வரையிலும்.

தமிழில் வெளியிடத் தகழி ஐம்பதுகளிலேயே உரிமையும் தந்திருந்தார் என்ற போதும் மொழிபெயர்த்து ஐம்பது வருடங்கள் கழித்துதான் நூலாக வெளிவந்தது.

வெளியிணைப்புகள்[தொகு]

http://naarchanthi.wordpress.com/2014/02/17/தோட்டியின்-மகன்/