தோட்டா நரசிம்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோட்டா நரசிம்மம்
காக்கிநாடா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
தொகுதிகாக்கிநாடா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 சூலை 1962 (1962-07-06) (அகவை 61)
வீரவரம், கிர்லாம்புடி மண்டலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
தேசியம்இந்தியார்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்தோட்டா வாணி
பிள்ளைகள்1 மகள், 1 மகன்
வாழிடம்காக்கிநாடா

தோட்டா நரசிம்மம் (Thota Narasimham) ஓர் இந்திய அரசியல்வாதியாவார. ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 2014, இந்தியப் பொதுத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு [1] காக்கிநாடா மக்களவைத் தொகுதியில் போட்டியாளரான யின் சலமலசெட்டி சுனிலை தோற்கடித்து வெற்றி பெற்றார். [2] [3]

சொந்த வாழ்க்கை[தொகு]

தோட்டா நரசிம்மம், 6 ஜூலை 1962 இல், தோட்டா வரகாலையா மற்றும் பத்மாஅம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர், 25 நவம்பர் 1986 அன்று வாணி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

தோட்டா நரசிம்மம், 2004 - 2009 மற்றும் 2009 - 2014 ஆகிய இரண்டு முறை ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2010 - 2014 க்கு இடையில் இவர் ஆந்திர மாநில அமைச்சராக இருந்தார். பின்னர், 16வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவையில் இவர் வணிக ஆலோசனைக் குழு, ரயில்வேயில் நிலைக்குழு; பொது நோக்கக் குழு; பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு போன்றவற்றில் உறுப்பினராக இருந்தார். இவர் மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Constituencywise-All Candidates". Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
  2. "Pallam Raju, Harsha Kumar lose elections". http://www.thehindu.com/news/national/andhra-pradesh/pallam-raju-harsha-kumar-lose-elections/article6017182.ece. பார்த்த நாள்: 2016-03-04. 
  3. "Y.S. Choudary is TDP Parliamentary Party leader". http://www.thehindu.com/news/national/andhra-pradesh/ys-choudary-is-tdp-parliamentary-party-leader/article6082966.ece. பார்த்த நாள்: 2016-03-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டா_நரசிம்மம்&oldid=3822771" இலிருந்து மீள்விக்கப்பட்டது