தோடகொப்பலு காரியப்பா இரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டி. கே. இரவிக்குமார்
தோடகொப்பலு காரியப்பா இரவி.jpg
கூடுதல் வரி வசூல் ஆணையர், கர்நாடக அரசாங்கம்
பதவியில்
29 அக்டோபர் 2014 – 16 மார்ச் 2015
கோலார் மாவட்ட ஆட்சித் தலைவர்
பதவியில்
10 ஆகத்து 2013 – 29 அக்டோபர் 2014
தனிநபர் தகவல்
பிறப்பு தோடகொப்பலு காரியப்பா இரவி
சூன் 10, 1979(1979-06-10)
தும்கூர், கர்நாடகம், இந்தியா
இறப்பு 16 மார்ச்சு 2015(2015-03-16) (அகவை 35)
பெங்களூரு, இந்தியா
தேசியம் இந்தியர்
வாழ்க்கை துணைவர்(கள்) குசுமா
படித்த கல்வி நிறுவனங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், நியூ டெல்லி

தோடகொப்பலு காரியப்பா இரவிக்குமார் (10 ஜூன் 1979 – 16 மார்ச் 2015) ஒரு இந்திய ஆட்சிப்பணியாளராக இருந்தவர். இவர் கர்நாடக அரசாங்கத்தில் கூடுதல் வரி வசூல் ஆணையராக பணிபுரிந்து வந்தார். 16, மார்ச் 2015-ல் மர்மமான முறையில் இவரது இல்லத்தில் இறந்தார்.[1]

பிறப்பு[தொகு]

1979-ம் ஆண்டு ஜூன் 10-ம் நாள், தும்கூர் மாவட்டத்தில் கரியப்பா, குருவம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இரவிக்குமாருக்கு இரமேஷ் என்ற சகோதரரும், பாரதி என்ற சகோதரியும் உள்ளனர். [2]

பணி[தொகு]

2011-ம் ஆண்டு முதல் 2013 வரை குல்பர்காவில் கூடுதல் ஆணையராகவும், ஆகத்து 2013 முதல் அக்டோபர் 2014 வரை கோலார் மாவட்ட ஆட்சியாளராகவும் பணி புரிந்தார். இவரது பணிக்காலத்தில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்தார். [3] இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2014-ல் பெங்களூக்கு கூடுதல் வரிவசூல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் வரி ஏய்ப்பு மற்றும் நிலுவையிலிருந்த ரூ.140 கோடி தொகையை கட்டுமானர்களிடம் இருந்து வசூலித்தார், அதன் காரணமாக சில மிரட்டல்களும் அவருக்கு வந்தன.[4][5]

இறப்பு[தொகு]

2015-ம் ஆண்டு மார்ச் 16-ம் நாள், இரவிக்குமார் கோரமங்கலாவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தூக்கில் தொங்கினார். ஆரம்ப பரிசோதனையில் இவரது இறப்பில் மர்மம் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. இவரது இறப்பைக் கண்டித்து கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.

இவர் இறப்பதற்கு முன்பாக, வரி ஏய்ப்பு செய்ததாகச் சில பிரபலங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "IAS Officer, Who Took On The Sand Mafia, Found Dead in Bengaluru". NDTV (16 March 2015). பார்த்த நாள் 16 March 2015.
  2. Bhuvaneshwari, S. (17 March 2015). "‘He would not have committed suicide’". The Hindu. பார்த்த நாள் 17 March 2015.
  3. Dev, Arun (16 March 2015). "IAS officer DK Ravi who 'exposed tax frauds' found dead in Bengaluru". The Times of India. பார்த்த நாள் 16 March 2015.
  4. "IAS officer DK Ravi, who took on sand mafia, found dead at his Bengaluru house". Deccan Chronicle (16 March 2015). பார்த்த நாள் 16 March 2015.
  5. Mondal, Sudipto (17 March 2015). "IAS officer who took on sand mafia found dead in Bengaluru residence". Hindustan Times. பார்த்த நாள் 17 March 2015.

வெளி இணைப்புகள்[தொகு]