தொழில்சார் பெண்களின் தேசியச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில்சார் மகளிர் தேசிய சங்கம் (National Association of Professional Women), 2007ம் ஆண்டில் மத்தேயு புரோமன் என்பவரால் ஐக்கிய அமெரிக்காவில் நிறுவப்பட்டது.இது 2014 முதல் தொழில்முறை பன்முகத்தன்மை வலையமைப்புடன் கூடிய ஒரு இலாப நோக்கற்ற தொழில்முறை சங்கம் மற்றும் வலைதளத்துடன் (NAPW.com) இயங்குகிறது.[1] இது அமெரிக்காவில் தொழில்முறை பெண்களுக்கான மிகப்பெரிய வணிக வலையமைப்பாகும். இது ஒவ்வொரு தொழில் மற்றும் தொழிலையும், மாறுபட்ட பின்னணியிலிருந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில், NAPW.com பெண்களுக்கான ஃபோர்ப்ஸின் சிறந்த 100 வலைத்தளங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[2]

தேசிய மாநாடுகள் (2011-2014)[தொகு]

தொழில்சார் மகளிர் தேசிய சங்கத்தின் தேசிய மாநாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நியூ யார்க் நகரததில் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இது பேச்சாளர்களுக்கு பல்வேறு நிபுணத்துவத்துவ முறைகளை வழங்கியதுடன், பல்வேறு வணிக அனுபவங்களை வழங்கினர். 2011ல் தொழில்சார் மகளிர் தேசிய சங்கத்தின் வலையமைப்பின் மாநாட்டின் முக்கிய பேச்சாளர்களாக இவாங்கா டிரம்ப் ஹெர்டா வான் ஸ்டீகல், கேத்தி காப்ரினோ மற்றும் வலேரி ஸ்மால்டோன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டாண்மை சமூக பொறுப்பு[தொகு]

மே 2014 இல் மத்தேயு ப்ரோன் மற்றும் ஸ்டார் ஜோன்ஸ் ஆகியோரால் தொழில்சார் பெண்களின் தேசியச் சங்கம் உருவாக்கப்பட்டது. இது இலாப நோக்கமற்ற நிறுவனம் ஆகும். இது பெண்களுக்கான சிக்கல்களை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை, பெண்களின் வெற்றிக்கான உடை, உள்ளூர் சமூக நிதி திரட்டும் நிறுவனங்கள் இந்த அமைப்பிற்கு உதவி செய்கிறது. பெண்களின் பிரச்சினைகள் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட பிற தொண்டு நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கான ஆதரவு, மற்றும் மவுண்ட் சினாய் மருத்துவமனையின் குழந்தை புற்றுநோயியல் பிரிவில் ஜாக் மார்ட்டின் நிதியை உள்ளடக்கியது. சனவரி 2018ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு செயலற்றதாகத் தெரிகிறது. அதன் சமூக ஊடக பண்புகள் சனவரி 2017 முதல் புதுப்பிக்கப்படவில்லை மற்றும் www.napwfoundation.org வலைத்தளம் தற்பொது பொதுவெளியில் செயல்படவில்லை. [3]

கல்வி உதவித்தொகை[தொகு]

தொழில்சார் பெண்களின் தேசியச் சங்கம், கல்வி உதவித்தொகை திட்டத்தை உருவாக்கியது. பட்டம் பெறும் உயர்நிலைப் பள்ளி மூத்தவர்கள் மற்றும் இளங்கலை கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியது. ஐக்கிய அமெரிக்க நாட்டில் அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது சான்றளிக்கப்பட்ட வர்த்தக பள்ளியில் படிக்கும் நிறுவன உறுப்பினர்களுக்கு கல்வி உதவி செய்யும். ஐந்து சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. [4] ரைசிங் ஸ்டார்ஸ் திட்டம் 2014 வரை செயலில் இருந்தது. [5]

தொழில்முறை பன்முகத்தன்மை வலைதள இணைப்பு (2014)[தொகு]

சூலை 2014 இல், தொழில்முறை பன்முகத்தன்மை வலைதள அமைப்பை அறிவித்தது [6] இது செப்டம்பர் 24, 2014 அன்று நிறைவடைந்தது.[7][8] இந்த பரிவர்த்தனையின் விளைவாக, ஸ்டார் ஜோன்ஸ், மத்தேயு பிராகன், ராண்டி ஜுக்கர்பெர்க் மற்றும் டோனா பிரேசில் ஆகியோர் பி.டி.என் இன் இயக்குநர்கள் குழுவில் சேர்ந்தனர். ஜோன்ஸ் தொழில்முறை பன்முகத்தன்மை வலையமைப்பின் தலைவராகவும், புரோமேன் இயக்குநராகவும், தலைமை இயக்க அதிகாரியாகவும் பணியாற்றினார். தொழில்முறை பன்முகத்தன்மை வலையமைப்பின் செய்திக்குறிப்பின் படி, இணைப்பின் போது, தொழில்சார் பெண்களின் தேசியச் சங்கம் 19 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயையும், நேர்மறையான பணப்புழக்கத்தையும் காட்டியது.

பன்னாட்டுப் பெண்கள் சங்கம்[தொகு]

2018ல் பன்னாட்டுப் பெண்கள் சங்கம் தொடக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவின் தொழில்சார் பெண்களின் தேசியச் சங்கத்தின் செயற்பாடுகள் சரியத் தொடங்கியது. [9]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "International Association of Women (IAW) - Dream. Rise. Lead". www.iawomen.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
  2. "The 100 Best Websites For Women 2013". Forbes. Archived from the original on August 22, 2013. பார்க்கப்பட்ட நாள் Dec 12, 2013.
  3. "NAPW Foundation". 24 July 2017. Archived from the original on 24 July 2017. பார்க்கப்பட்ட நாள் 31 January 2018.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  4. "The National Association of Professional Women's Rising Stars Scholarship (NAPW Rising Stars)". Archived from the original on 2013-12-27. பார்க்கப்பட்ட நாள் Dec 12, 2013.
  5. "Rising Stars Education Scholarship". பார்க்கப்பட்ட நாள் Jan 12, 2018.
  6. Inc., Professional Diversity Network (14 July 2014). "Professional Diversity Network and National Association of Professional Women Announce Definitive Merger Agreement". பார்க்கப்பட்ட நாள் 31 January 2018. {{cite web}}: |last= has generic name (help)
  7. "Professional Diversity Network and National Association of Professional Women Complete Merger Nasdaq:IPDN". Globenewswire.com. 2014-09-24. பார்க்கப்பட்ட நாள் 2018-01-31.
  8. "Professional Diversity Network and National Association of Professional Women Complete Merger :: Professional Diversity Network, Inc. (IPDN)". Professional Diversity Network, Inc. (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
  9. "All SEC Filings :: Professional Diversity Network, Inc. (IPDN)". Professional Diversity Network, Inc. பார்க்கப்பட்ட நாள் 31 January 2018.