தொல்லியல் அருங்காட்சியகம், அமராவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் அருங்காட்சியகம், அமராவதி இந்தியாவின் தென் மாநிலங்களுள் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா ஆற்றின் வலது கரையில் குண்டூர் நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமராவதியில் அமைந்துள்ளது. அமராவதியின் வரலாறு கிமு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. இங்குள்ள, ஒரு காலத்தில் மிகவும் சிறப்புற்றிருந்த மகாசைத்தியம் எனப்படும் பெரிய பௌத்த நினைவுச் சின்னம் ஏறத்தாழ ஒன்றரை ஆயிரவாண்டுகால வரலாறு கொண்டது. அமராவதியில் கலைப்பாணி இந்தியக் கலை வரலாற்றில் சிறப்பிடம் கொண்டதாகும்.

இங்குள்ள முதன்மைக் காட்சிக்கூடத்தில் அமராவதியின் கலைப்பாணியை விளக்கும் தேர்ந்தெடுக்கபட்ட எடுத்துக்காட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது காட்சிக்கூடத்தில் "பெரு மனித அடையாளங்களை"க் கொண்ட புத்தரின் சிலையும், வேறு சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் நாணயங்கள், அணிகலன்களுக்குரிய மணிகள் என்பனவும் இங்கே உள்ளன. மூன்றாவது காட்சிக் கூடத்தில் கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சில சிற்பங்களுடன், அசோகர் தூணின் உடைந்த பகுதிகள், அல்லூரிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை, லிங்கராச பள்ளியைச் சேர்ந்த தர்மச் சக்கரம், மற்றும் பல பொருட்களும் உள்ளன.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]