தொண்டைமானாறு
Appearance
தொண்டைமானாறு | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கைச் சீர் நேரம்) |
தொண்டைமானாறு (Thondaimanaru) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வடமராட்சியின் பிரதேசங்களில் ஒன்று.
தொண்டைமானாறு நீரேரி
[தொகு]கடலுடன் கலக்கும் தொண்டைமானாறு நீரேரி ஆனையிறவு முதல் நீண்டுள்ளது.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயம்
[தொகு]வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. செல்வச்சந்நிதியில் ஓடும் நன்னீரேரி வல்லிநதி என்று முன்னர் அழைக்கப்பட்டது
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்
[தொகு]இப்பிரதேசத்தின் ஒரேயொரு பாடசாலையாக தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் அமைந்துள்ளது..இது ஆரம்பித்து நூறாண்டுகள் கடந்த பாடசாலையாகும். இதன் தாபகர் திரு சி. வீரகத்திப்பிள்ளை ஆவார்.
வரலாற்றுச் சிறப்பு
[தொகு]- செல்வச் சந்நிதி
- சங்கிலியன் ஆட்சிக்காலத்துடன் தொடர்புபட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சில எச்சங்கள் இன்றும் இப்பிரதேசத்திலும் அயற்பிரதேசத்திலும் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை:-
- கெருடாவில் வீரமாகாளி அம்மன் ஆலயம்
- காட்டுப்புலம் கோட்டைகாடு
- கெருடாவில் மண்டபக்காடு
- தொட்டிலடி கந்தசுவாமி கோயில்
- கப்பல் கட்டும் தொழில் இப்பிரதேசத்தின் பண்டைய சிறப்புப் பெற்ற தொழிலாக இருந்துள்ளது.
அறியப்பட்ட நபர்கள்
[தொகு]- மு. நவரத்தினசாமி, நீச்சல் வீரர்
- குந்தவை, எழுத்தாளர்
வெளியிணைப்பு
[தொகு]- thondaimanaru.org பரணிடப்பட்டது 2012-04-19 at the வந்தவழி இயந்திரம்