தேவகிரி மலை
தேவகிரி மலை Devagiri hill | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 394 அடி (120 m) |
ஆள்கூறு | 18°53′46″N 84°07′15″E / 18.89611°N 84.12083°E |
புவியியல் | |
அமைவிடம் | ராயகடா மாவட்டம், இந்தியா |
மூலத் தொடர் | தேவகிரி மலைகள் |
ஏறுதல் | |
எளிய வழி | வாகனம் |
தேவகிரி மலை (Devagiri hill) என்பது இந்திய மாநிலம் ஒடிசாவில் ராயகடாவிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் சுமார் 120.2 மீட்டர்கள் (394 அடி) உயரமுடைய மலையாகும். மற்ற மலைகளைப் போல் அல்லாமல், இந்த மலையின் உச்சி ஒரு செவ்வக மேடை பொன்று உள்ளது. மலையில் அமைக்கப்பட்டுள்ள 476 படிகள் மூலம் ஒருவர் மலை உச்சியை அடைய முடியும் என்பது மலையின் மற்றொரு தனிச்சிறப்பு. மலையின் உச்சியில், கங்கை, யமுனை, சரசுவதி, பார்கவி மற்றும் இந்திரத்யும்ன ஏரி எனப்படும் வற்றாத நீரின் துருவங்கள் உள்ளன.
அருகிலுள்ள இடங்கள்
[தொகு]மலையின் உச்சியில் பஞ்சமுகி (ஐந்து முகம்) சிவலிங்கம் மற்றும் அஷ்த லிங்கம் (எட்டு லிங்கங்கள்) இருப்பதால் இந்த மலை புனிதமாகக் கருதப்படுகிறது.[1][2][3][4][5][6][7] இத்தலத்தின் தொன்மையைப் பறைசாற்றும் கல்வெட்டு ஒன்றும் இங்குக் காணப்படுகிறது.[8] மலையில் இரண்டு தாடைகள் போல் ஒரு குகை உள்ளது.[9] இரண்டு தாடைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. ராயகடாவிலிருந்து கே. சிங்பூருக்கு வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DEVAGIRI" rayagada.nic.in
- ↑ "Places of Interest in Rayagada" பரணிடப்பட்டது 14 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம் oriyaonline.com
- ↑ "Rayagada" பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் indiatourismecatalog
- ↑ "Encyclopaedia of Tourism Resources in India, Volume 2" Google books
- ↑ "Cultural heritage of undivided Koraput District" Orissareview/2014/April–May
- ↑ "Rayagada- The Land Of Natural Beauty- By Manoj Senapati" nuaodisha.com
- ↑ "Interim Report"Odisha" பரணிடப்பட்டது 2 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம் tourism.gov.in
- ↑ "Devgiri Hills" orissagateway.com
- ↑ "Devagiri" odisha360.com