உள்ளடக்கத்துக்குச் செல்

தேர்ப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேர்ப் படை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேரில் நகர்ந்து தாக்கும் படை தேர்ப் படை. தேரில் குதிரைகள் பூட்டப்பட்டன. அதை தேர்ப்பாகன் செலுத்தினான். தேருக்குள் இருந்துகொண்டு வீரர்கள் அம்பெய்தனர், அல்லது பிற ஆயுதங்களால் தாக்கினர். வெற்றிக்குப் பின்னர் வீரர்களும், மற்றவர்களும் சேர்ந்து தேருக்கு முன்னும் பின்னும் குரவை ஆடுவர்.

தொல்காப்பியம் இதனைத் தேரோர் களவழி என்று குறிப்பிடுகிறது. [1]

சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, வெண்டேர்ச் செழியன், திண்டேர் ... குட்டுவன், கொடித்தேர்ப் பொறையன், கொடித்தேர்ச் செழியன், இயல் தேர் வழுதி முதலானோர் தேர்ப்படை கொண்டிருந்த சங்ககால மன்னர்கள்.

தேரில் போரிடுவது பற்றி கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்களில் தகவல்கள் உண்டு.

உசாத்துணைகள்

[தொகு]
  • ந. சி. கந்தையா பிள்ளை. (2006). தமிழர் பண்பாடு. அப்பர் அச்சகம்: சென்னை.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. ஏரோர்க் களவழி அன்றிக் களவழித் தோர் தோற்றிய வென்றியும், தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும் ... பின்தேர்க் குரவையும் - தொல்காப்பியம் புறத்திணையியல் 17
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்ப்படை&oldid=3172147" இலிருந்து மீள்விக்கப்பட்டது