தேரை மருத்துவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேரை மருத்துவர்கள் (Toad doctors) என்பவர்கள் இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை செயல்பட்ட நாட்டுப்புற மருத்துவ மந்திரவாதிகள் ஆவார். இவர்களின் முக்கியமாக இசுக்ரோபுலாவை குணப்படுத்துவதாகும். இசுக்ரோபுலா என்பது அரச் பாவம் எனப்படும் ஒரு வகையான தோல் நோய் ஆகும். ஆனால் இவர்கள் சூனியத்தின் விளைவாக ஏற்படும் பிற நோய்களையும் குணப்படுத்துவார்கள் என்று நம்பப்பட்டது. இவர்கள் நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் குணப்படுத்த அந்த நபரின் கழுத்தில் உயிருள்ள தேரை அல்லது தேரையின் காலை மஸ்லின் துணிப்பையில் வைத்து தொங்கவிடுவர். இவ்வாறு நோயுற்றவர்களைக் குணப்படுத்தினர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரை_மருத்துவர்கள்&oldid=3494669" இலிருந்து மீள்விக்கப்பட்டது