தேனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனூர் (Thenur) மதுரை மாவட்டத்தில், மதுரை மேற்கு பஞ்சாயத்து ஒன்றியத்தில், சமயநல்லூர் அருகில், மதுரை நகரிலிருந்து 12 கி. மீ., தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

அருகில் அமைந்த ஊர்கள்[தொகு]

  1. சமயநல்லூர் 4 கி. மீ.,
  2. சோழவந்தான் 7.8 கி. மீ.,

சிறப்புகள்[தொகு]

தேனூர் கிராமத்தில் மது மற்றும் புகையிலை பொருட்கள் காலம் காலமாக விற்கப்படுவதில்லை. கள்ளழகருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த கட்டுப்பாட்டை மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.

சித்திரைத் திருவிழா முதன் முதலில் தேனூர் கிராமத்தில்தான் நடந்தது. பின்னர் நாயக்க மன்னர் காலத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா மதுரைக்கு மாற்றப்பட்டது.

இதற்கு முன்பு அழகர் மலையில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி கரையோரத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிப்பதுதான் வழக்கமாக இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனூர்&oldid=3622768" இலிருந்து மீள்விக்கப்பட்டது