தேனீக்களின் நடனம்
தேனீக்களின் நடனம் (waggle dance) என்பது அவைகளின் சமூக வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அவைகளின் வாழ்க்கையைச் சுமூகமாகக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கிறது. முக்கியமாக உணவு தேடும் உதவியாளர் தேனீக்களை ஒருங்கிணைத்து தேன் தரும் மலர்களை நோக்கி ஒருங்கிணைத்து கொண்டு செல்வதே இதன் பணி ஆகும். தேனீன் ஆதாரமாகிய மலர்கள் இருக்கும் இடத்தைத் துல்லியமாக புரிய வைத்து அவற்றை அங்கு அழைத்துச் செல்ல உதவுவது இந்த நடனமே.[1][2]
இவை தேன் கூட்டில் உணவு தேட உதவியாளர்களை தேர்ந்தெடுப்பதும் ஒரு இனிய கலையே . சாரண தேனீ அல்லது வழிகாட்டும் தேனீ முதலில் தேன் இருக்கும் மலரை அடையாளம் கண்டு தன் உடலில் நிறைத்து கொண்டு வரும். பின் தன கூட்டிற்கு வந்து தான் கொண்டு வந்த தேனை வாய்க்கு கொண்டு வந்து கூட்டில் இருக்கும் தேனீக்களுக்கு விநியோகம் செய்யும். இவ்வுதவியாளர் கொடுத்த தேனை அருந்திய மற்ற தேனீக்கள் தங்கள் நடனத்தை ஆரம்பித்து விடும். நடனம் இரண்டு வகைப்படும். ஒன்று வட்ட நடனம் மற்றொன்று உடம்பை வளைத்து ஆடும் வாக்கிள் நடனம் ஆகும். சிலவேளைகளில் இவை நிலை மாறி இரண்டிற்கும் இடைப்பட்ட சிக்கிள் நடனமாக மாறி விடும். அதாவது அரை எட்டு போட்டது போல இவை ஆடும் கண்டுபிடிக்கப்பட்ட உணவின் தரம் மற்றும் அளவிற்கு ஏற்றார் போல் நடனத்தின் அழகும் தரமும் நிர்ணயிக்கப் படும் . தேனைத் தரும் மலர்களின் தரம் மற்றும் அளவு உன்னதமாக மற்றும் மேன்மையாக இருந்தால் தேன் வேட்டைக்கு போய் வரும் எல்லா தேனீக்களும் மிகவும் உற்சாகத்துடனும் மிகவும் நீண்ட நடனம் ஆடும். தரமற்றதாக இருந்தால் நடனம் உற்சாகமற்றதாகவும் மிகவும் குறைவான நேரம் மாத்திரமே ஆடப்படும்.
வட்ட நடனம்
[தொகு]உணவு கூட்டிலிருந்து 25 - 100 மீட்டர் தொலைவில் இருக்கும் போது தேனீக்கள் வட்ட நடனம் ஆடும். காத்திருக்கும் தேனீக்களுக்கு தான் கொணர்ந்த தேனைக் கொடுத்த பிறகு சாரண தேனீக்கள் வட்ட வடிவில் சுற்றி நடனம் ஆடும் மேலும் அடிக்கடி தன் திசையை மாற்றிக் கொள்ளும். நடனம் முடிந்த பிறகு நடனம் அதே இடம் அல்லது வேறொரு இடத்தில் நடக்கும். இதை போல மூன்று அலலது அரிதாக அதற்கு மேலும் நடை பெறும். கூட்டிற்கு வெளியே மற்றும் ஒரு நடனம் ஆடிய பிறகு உணவு தேட தேனீக்கள் எல்லா இடத்திற்கும் பறக்க ஆரம்பித்து விடும் .வட்ட நடனம் பொதுவாக திசையை சொல்லுவதில்லை . ஆனால் சாரண தேனீ நடனம் ஆடும் போது தான் கொண்டு வந்த மலரின் நறுமணத்தை வீசச் செய்யும். அதை கொண்டு தேனீக்கள் தாங்கள் கண்டு பிடிக்க வேண்டிய மலரை நாடிச் செல்லும்.
உடம்பை ஆட்டி ஆடும் நடனம் (வாக்கிள் )
[தொகு]- உணவு கிடைக்கும் இடம் தொலைவில் இருக்கும்போது வட்ட நடனம் உடல் ஆட்டும் நடனமாக அல்லது எட்டு போடும் நடனமாக மாறும் . ஒரு இடத்தில் நிலை மாறி அரை எட்டு போட்டாற் போன்ற நடனமாக மாறிவிடும்.
- எட்டு போடும் நடனம் உணவு கிடைக்கும் இடத்தையும் அங்கு செல்வதற்கு வேண்டிய ஆற்றலை குறித்து உணர்த்துவதாக இருக்கும் ஆற்றல் என்பது ஒரு சுற்று சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக ஒரு தேனீ 200 மீட்டர் தொலைவில் உள்ள உணவை எடுத்து வர 8 - 9 சுற்றும் 15 நொடிகளும் எடுத்துக் கொள்ளும். 2000 மீட்டர் தொலைவிற்கு 3 சுற்றும் 15 நொடிகளும் எடுத்துக் கொள்ளும் .நடனம் உணவின் திசையையும் குறிக்கும். நேராக நடனம் ஆட்டினால் உணவு நேர் திசையில் இருக்கும் என்றும் மேல் நோக்கி ஆடினால் சூரியன் இருக்கும் திசையில் இருக்கும் என்றும் உணர்த்தும். மேல் நோக்கி 60 பாகை கோணத்தில் இடப் பக்கம் திரும்பி ஆடினால் உணவு சூரிய திசையில் 60 பாகை இடப் பக்கத்தில் உள்ளது என்பதை உணர்த்துகிறது.
மேற்கோள்
[தொகு]- ↑ Riley, J.; Greggers, U.; Smith, A.; Reynolds, D.; Menzel, R. (2005). "The flight paths of honeybees recruited by the waggle dance". Nature 435 (7039): 205–207. doi:10.1038/nature03526. பப்மெட்:15889092. Bibcode: 2005Natur.435..205R.
- ↑ Seeley T.D.; Visscher P.K.; Passino K.M. (2006). "Group decision making in honey bee swarms". American Scientist 94: 220–229. doi:10.1511/2006.3.220.
வெளி இணைப்புகள்
[தொகு]- யூடியூபில் The Waggle Dance of the Honeybee, Georgia Tech College of Computing
- Waggle Dance Infographic - VetSci
- Communication and Recruitment to Food Sources by Apis mellifera பரணிடப்பட்டது 2005-04-03 at the வந்தவழி இயந்திரம் — USDA-ARS
- Honeybee Communication பரணிடப்பட்டது 2016-01-22 at the வந்தவழி இயந்திரம் — Kimball's Biology Pages