தேனி கல்வி மாவட்டம்
Appearance
தேனி கல்வி மாவட்டம் என்பது தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டங்களில் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் பெரியகுளம் கல்வி மாவட்டத்திலிருந்த தேனி வட்டாரம், மயிலாடும்பாறை வட்டாரம் மற்றும் உத்தமபாளையம் கல்வி மாவட்டத்திலிருந்த போடி வட்டாரம் என்று மூன்று வட்டாரங்களிலுள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் புதிய தேனி கல்வி மாவட்டத்தில் இணைக்கப்பட்டன. [1]
இக்கல்வி மாவட்டத்திற்கு மாவட்டக் கல்வி அதிகாரி தலைமை அதிகாரியாக இருக்கிறார்.