உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (National Translation Mission) இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம் ஆகும். இது எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இந்திய மொழிகளில் கல்வி அறிவு பெற துவங்கப்பட்டது. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு இத்திட்டத்திற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆங்கிலம் இந்தியாவின் அனைத்து கல்விசார்ந்த உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதால், இந்திய ஏழை மாணவர்கள் கல்வி அறிவு பெற முடிவதில்லை. இதன் காரணமாக, இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தளம் 23 இந்திய ஆட்சி மொழிகளிலும் கிடைக்கிறது.

இதுவரை ஆங்கிலம் - இந்திய மொழி என்ற வகையில் சில அகராதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பொறிவழி மொழியாக்கத்தினை மேம்படுத்தல் இதன் கொள்கைகளுள் ஒன்று.

வெளியீடுகள்

[தொகு]

இதுவரை 133 அறிவுசார் பனுவல்களும் ஆறு அகராதிகளும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு நிகரன்கள் எனும் வரிசைத்தொடரின் கீழ் 22 தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட ஏழு வெளியீடுகளும் இத்திட்டத்தின்மூலம் வெளிவந்துள்ள தமிழ் பதிப்புகளாவன.

ஜகன்நாத் மொகந்தி எழுதிய “Indian Education in the Emerging Society” என்ற நூலின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர்: எஸ் ராமு, வெளியீட்டாளர்: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு

வி. க. ர. வ. ராவ் எழுதிய “Education and Human Resource Development” என்ற நூலின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர்: சூ வின்ஸ்டன் குரூஸ், வெளியீட்டாளர்: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு

பெர்னார்டு ப்ளாக் & ஜார்ஜ் லி டிராகர் எழுதிய “Outlines of Linguistic Analysis” என்ற நூலின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர்: சூ வின்ஸ்டன் குரூஸ், வெளியீட்டாளர்: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு

ஆ ரெ ராட்கிளிஃப் பிரவுன் எழுதிய “Structure and Function in Primitive Society: Essays and Addresses” என்ற நூலின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர்: சூ வின்ஸ்டன் குரூஸ், வெளியீட்டாளர்: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு

ஹெரால்டு ஜே லாஸ்கி எழுதிய “A Grammar of Politics” என்ற நூலின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர்: க. பூரணச்சந்திரன், வெளியீட்டாளர்: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு மற்றும் எதிர் வெளியீடு, பொள்ளாச்சி

பா கிஸ்பெர்ட் எழுதிய “Fundamental of Sociology” என்ற நூலின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர்: க. பூரணச்சந்திரன், வெளியீட்டாளர்: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூரு

  • லாங்மன்-என்டிஎம்-சிஐஐஎல் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி

Longman-NTM-CIIL English-English-Tamil Dictionary; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-3130-7(Hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-3129-1(paperback) வெளியீட்டாளர்: பியர்சன் எஜுகேஷன், இந்தியா

மேற்கோள்கள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]