க. பூரணச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


க. பூரணச்சந்திரன் ஒரு தமிழ் எழுத்தாளர். இலக்கிய விமர்சனம், கோட்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மார்க்சிய சிந்தனையுடன் கூடிய நல்ல திறனாய்வாளர். இலக்கியக் கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார். இதழியல் துறையிலும் பணியாற்றி, அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார். காலச்சுவடு, நிகழ், தமிழ் நேயம், மேலும் உள்ளிட்ட பல இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல கருத்தரங்குகளை நடத்தி, நூல்களையும் தொகுத்துள்ளார். திருச்சியில் (1989) முதன்முதலில் பாதல்சர்க்காரின் பெயரால் நாடகப்பட்டறை நடத்தியவர். திருச்சியில் வாசகர் அரங்கம், திருச்சி நாடக சங்கம், சினிஃபோரம் (கலைத் திரைப்படங்களைக் காண்பதற்கான திரைப்படக் கழகம்) ஆகியவற்றில் பங்கேற்று, இத்துறைகளில் இளைஞர்களை முன்னேற்ற முயற்சி எடுத்தவர். பணிநிறைவுக்குப் பின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எமரிடஸ் பேராசிரியராகப் பணியாற்றியதோடு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாற்றினை வரைந்துகொடுத்தவர்.

சமுதாயத்தின்பால் தெளிந்த சிந்தனையோடு, அதன் வளர்ச்சிக்கு முற்போக்குச் சிந்தனைகளுடன் தன் முழு உழைப்பையும் ஓயாது அளித்து வருபவர். கல்லூரி வகுப்பறைகளாக இருப்பினும், கருத்தரங்குகளாக இருப்பினும் இவரது சொற்பொழிவுகள் தேர்ந்த ஞானத்தின் வெளிப்பாடு. தக்க தகவுடைய சான்றுகளுடன் ஐயமற விளக்கம் தரும் ஆற்றல் கொண்டவர். நல்ல விமரிசகர், சிறந்த மொழி பெயர்ப்பாளர்.

2015 ஆம் ஆண்டு இவர் பெயரில் திறனாய்வு அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர் மாணவர்களுக்கு திறனாய்வு மற்றும் பல்வேறு துறைகளில் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறார். இதைத் தவிர இவர் http://www.poornachandran.com என்ற இணையத்தளத்தை நடத்தி வருகிறார். இதில் மாணவர்கள் மற்றும் சமுதாய நலன்களை கருத்தில் கொண்டு பல்துறை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

இவர் எழுதியுள்ள நூல்களின் பட்டியல் வருமாறு:

 1. அமைப்புமைய வாதமும், பின்னமைப்புவாதமும்
 2. பத்திரிகை, தலையங்கம், கருத்துரை
 3. செய்தித் தொடர்பியல் கொள்கைகள்
 4. தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு (1980வரை) - தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு
 5. இந்திய மொழிகள் ஓர் அறிமுகம்
 6. நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள்
 7. இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள்
 8. கவிதையியல்
 9. கதையியல்
 10. கவிதைமொழி தகர்ப்பும் அமைப்பும்
 11. தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்
 12. தொல்காப்பியப் பொருள்கோள்

முப்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தத்துவம், வரலாறு முதல் இலக்கியம், மருத்துவம் வரை பல்வேறு வகைகளிலும் இவை உள்ளன.

2011இல் ஆனந்தவிகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியது. இவ்விருது ஆந்திரக் கவிஞர் வரவர ராவ் எழுதிய சிறைப்பட்ட கற்பனை என்ற நூலின் மொழிபெயர்ப்புக்காகத் தரப்பட்டது.

சல்மான் ருஷ்தியின் “நள்ளிரவின் குழந்தைகள்” (மிட்நைட்ஸ் சில்ட்ரன்) நூலுக்கு நாமக்கலில் உள்ள கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும் பத்தாயிரம் ரூபாய் பரிசும் அளித்துள்ளது.

இந்துக்கள் - ஒரு மாற்று வரலாறு என்ற நூலுக்காக (Hindus - An Alternative History) 2016க்கான சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதையும் ஆனந்தவிகடன் வாயிலாக இவர் பெற்றார். இதற்காக மே மாதம் நாகர்கோவில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இவருக்குப் பாராட்டுவிழா நடத்தி கௌரவித்தது.

இவர் மொழி பெயர்த்த நூல்களின் பட்டியல் வருமாறு:

 1. குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள்
 2. மனித உரிமைகள் பற்றிய ஐ.நா. அறிக்கை
 3. சிறார் உரிமை பற்றிய ஐ.நா. அறிக்கை
 4. விஷன்ஸ் கையேடு-மனித உரிமைகளும் குடியுரிமையும்
 5. விஷன்ஸ் கையேடு-உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள்
 6. உலகமயமாக்கல்
 7. நீட்சே
 8. இறையியல்
 9. பயங்கரவாதம்
 10. சமூகவியல்
 11. இசை
 12. சிறைப்பட்ட கற்பனை (வரவர ராவ்)
 13. பொறுப்புமிக்க மனிதர்கள் (மனு ஜோசப்)
 14. நள்ளிரவின் குழந்தைகள் (சல்மான் ருஷ்தீயின் மிட்நைட்ஸ் சில்ட்ரன்)
 15. காந்தியைக் கொன்றவர்கள் (The men who killed Gandhiநூலின் தமிழாக்கம்)
 16. இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு (வெண்டி டோனிகர் எழுதியது)
 17. நொறுங்கிய குடியரசு (அருந்ததி ராயின் The Broken Republic)
 18. ஊரடங்கு இரவு (பஷரத் பீர்)
 19. டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள் (பெண்கள் மருத்துவ நூல்)
 20. பேற்றுச்செவிலியர் கையேடு
 21. இணை மருத்துவம், மாற்றுமருத்துவம், உங்கள் உடல்நலம்
 22. தலைமுடி இழப்பு-மருத்துவம்
 23. மூல வியாதி
 24. ஐம்பது உடல்நலக் குறிப்புகள்
 25. இயற்கை ஞானம்
 26. மரபணு மாற்றிய உணவுகள்
 27. இரண்டாம் சரபோஜி ஆட்சியின்கீழ் தஞ்சாவூர்
 28. கீழையியல் தத்துவம்
 29. பின்நவீனத்துவம்
 30. புவி வெப்பமயமாதல்
 31. நிலத்தோற்றமும் கவிதையும் (தனிநாயகம் அடிகளுடைய Landscape and Poetry)
 32. மவுலானா அபுல்கலாம் ஆசாத்
 33. சமூகவியலின் அடிப்படைகள் (கிஸ்பரட் சே. ச)
 34. கடவுள் சந்தை (மீரா நந்தா)
 35. இவை தவிர இப்போது பேராசிரியர் ஹெரால்டு லாஸ்கி எழுதிய சிறந்த நூலான A Grammar of Politics என்ற நூலையும்,
 36. சாமுவேல் ஹண்டிங்டன் எழுதிய The Clash of Civilizations என்ற நூலையும் மொழிபெயர்த்துவருகிறார்.

சாகித்திய அகடாமி விருது[தொகு]

மனூ ஜோசப் ஆங்கிலத்தில் எழுதிய Serious Man என்ற புகழ்பெற்ற புதினத்தை தமிழில் பொறுப்புமிக்க மனிதர்கள் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார், இந்த மொழிபெயர்ப்புக்காக 2016 ஆண்டுக்கான சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

 1. ஆதி (பெப்ரவரி 2017). "பேராசிரியர் பூரணச்சந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது". தி இந்து: 8. doi:26. 

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பூரணச்சந்திரன்&oldid=2311277" இருந்து மீள்விக்கப்பட்டது