தேசிய மக்கள் பேராயம்
Appearance
தேசிய மக்கள் பேராயம் என்பது சீனாவின் உயர் அதிகாரம் பெற்ற சட்டமன்றம் ஆகும். இதர பல நாடுகள் போல் அல்லாது இதுவே சீனாவின் ஒரே சட்டமன்றம். இதன் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக சீனப் பொதுவுடமைக் கட்சியினால் தீர்மானிக்கப்படுகிறார்கள்.
இந்த உறுப்பினர்கள் பல் நிலை தேர்தல் முறையால் தேர்தெடுக்கப்படுகிறார்கள். மாகாண மக்கள் பேராயங்களால் இவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மாகாண பேராய உறுப்பினர்கள் மேலும் கீழ் நிலை பேராயங்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஊர்களின் பேராய உறுப்பினர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.