உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நூலகம், மலேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்புஸ்தகான் நெகரா மலேசியா
நாடு மலேசியா
வகைநூலகம்
தொடக்கம்பெப்ரவரி 1966
அமைவிடம்232, ஜாலன் துன் ரசாக், கோலாலம்பூர்
அமைவிடம்3°10′13″N 101°42′40″E / 3.170368°N 101.711207°E / 3.170368; 101.711207
ஏனைய தகவல்கள்
இயக்குநர்நஃபீசா அகமது
பணியாளர்கள்500
இணையதளம்www.pnm.gov.my
Map
Map

தேசிய நூலகம், மலேசியா (மலாய்: பெர்புஸ்தகான் நெகரா மலேசியா) (PNM) தேசிய நூலகச் சட்டம் 1972இன்படி (சட்டம் 80) நிறுவப்பட்டுள்ள ஐஎசுஓ 9001:2008 சான்றிதழ் பெற்ற நூலகமாகும். இதன் கட்டிட வடிவமைப்பு மலாய்களின் மரபார்ந்த தலைப்பாகை, டெங்கோலோக் (tengkolok) போன்று அமைந்துள்ளது; இந்தத் தலைப்பாகை மலேசிய பண்பாட்டில் அறிவார்ந்த பெருமையையும் மதிப்பையும் குறிப்பதாக உள்ளது. கூரையின் ஓடுகள் கூட கைன் சொங்கெத் (Kain Songket) எனப்படும் மரபார்ந்த கையால் நெய்யப்படும் துணி போன்று தனித்தன்மை வாய்ந்தனவாக உள்ளன.

தேசியளவில் தற்கால, எதிர்கால தலைமுறையினருக்கு அறிவுப் பெட்டகங்களை பாதுகாக்கும் பொறுப்பை தேசிய நூலகம் கொண்டுள்ளது. இதற்காக நூல்களை சேகரிக்க நூலகப் பொருட்கள் வைப்பு சட்டம், 1986ஐ பயன்படுத்தி கட்டாயமாக கையகப்படுத்தியோ, கொடையாகவோ, மாற்றீடாகவோ பெறுகின்றது. இந்த நூலகத்தில் 4.05 மில்லியன் பொருட்கள் உள்ளன; இதில் 3.85 மில்லியன் பொருட்கள் அச்சிடப்பட்டவையாகவும் 98,364 அச்சிடாதப் பொருட்களாகவும் 4,660 மலாய் கையெழுத்துப் பிரதிகளாகவும் 95,984 எண்மியப் பொருட்களாகவும் உள்ளன. தேசிய நூலகத்தின் எண்மியமாக்கப்பட்டவற்றை இத்தளத்தில் காணலாம் பரணிடப்பட்டது 2018-04-09 at the வந்தவழி இயந்திரம்.

இத்தேசிய நூலகத்தின் பெருமையாக மலேசியானா தொகுப்பு உள்ளது; மலேசியாவில் அல்லது வெளிநாடுகளில் வெளியான இவற்றின் முழுமையான அல்லது பெரும்பகுதியான உள்ளடக்கம் அச்சிடப்பட்ட நாள் அல்லது பயன்படுத்தப்பட்ட மொழி தொடர்புடையது. மற்றுமொரு சிறப்புக்கூறாக மலாய் கையெழுத்துப் படிகள் மற்றும் இகாயத் ஹேங் துயா உள்ளன; இவற்றை யுனெசுக்கோ “உலகப் பதிவேட்டின் நினைவகம்” எனக் குறிப்பிடுகின்றது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நூலகம்,_மலேசியா&oldid=3344168" இலிருந்து மீள்விக்கப்பட்டது